Friday, 31 May 2013

நெஞ்சே எழு ....!!!! என் கவிதை ... கவித்திரி சு .மா.காயத்ரி

நெஞ்சே எழு .........
கவித்திரி சு .மா.காயத்ரி


 


 













விழித்திரை கண்ணீர்
கணினித்திரை மறைக்கிறது .....
இதயம் மட்டும்
பேசுகிறது தனக்குள்
தனியாக.....
பேசாத மௌன மொழிகள்
விழி பேசுகிறது
கண்ணீர் வழியே ......
யாரையோ பின்பற்றி
சென்ற பாதையில் ...
இன்று நான் மட்டும்
தனியாக ......
நீ கொடுத்த ஊக்கம்
என் பேனா மை ஏக்கம் .....
நீ இல்லை என்ற போது
யாருக்காக இனி எழுத வேண்டும் ....?
என்னோடு சேர்ந்து
வீழ்ந்தது 
என் பேனாவும் .....
நீ வாராமல்
இனி எழுவதில்லை
என்ற கொள்கையோடு !!!!!