அய்யனார் குதிரை ....
என் கவிதை சு.மா.காயத்ரி
யாருக்காகவும் பயப்படாமல்
தன்னந்தனியாக நிற்கும்
உன்னை பார்த்து
பயந்தவரே அதிகம் .......
காற்றுக்கும் மழைக்கும்
வெயிலுக்கும் குளிருக்கும்
ஓங்கிய காலுடன்
உயர்ந்து நிற்கிறாய் .......
ஊர் காத்து நிற்கும்
அரிவாளுடன் நிற்கும்
அய்யனாருக்கு வாகனமாய் நீ......
எங்கோ பார்த்த ஞாபகமாய்
தொலைந்து போன
எந்தன் கலசராம் .......
எப்போதோ நிழலுக்காக
நினைவுகூறப்படும்
அய்யனார் குதிரைகள் .......
# வீரம்
சிறுவயதில் எனக்கு தெரிந்த சாமி எங்கள் கிராமத்து காவல் தெய்வம் கருப்பராயன் தான். பட்டணத்திற்கு வந்த பிறகு முருகன், விநாயகன், அம்மன் , வெங்கடாசலபதி என்று பல அழகிய தெய்வங்கள் அறிமுகமாயின. கருப்பராயனும் அய்யனாரும் விவசாயிகள் மற்றும் கிராமத்து வாசிகள் சாமியென்றும் முடிவு செய்து அவர்களை மறந்துவிட்டேன். நான் மட்டுமல்ல யாருமே அவர்களது வீட்டில் கருப்பராயனையோ, அய்யனாரையோ சிலையாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதை பார்க்கவில்லை. உங்களது கவிதையை படித்த போது அந்த சாமிகள் கண்முன்னே வந்து ஏண்டா எங்களை மறந்துட்டியா என்று கேட்பது போல இருந்தது. கவிதையோ, கதையோ நமக்குள் ஏதோ ஒரு உணர்வை கிளறி விட வேண்டும். அப்படிப்பார்த்தால் உங்கள் கவிதை எனது பால்ய நினைவுகளை கிளறிவிட்டது. நல்ல கவிதைக்கு நன்றி .
ReplyDelete