இதுவும் கடந்து
போகும் ....
என் கவிதை சு.மா.காயத்ரி

கணங்களாய்
நொடிகளாய்
நிமிடங்களாய்
மணிகளாய்
நிற்காமல் ஓயாமல்
ஓடிக்கொண்டிருக்கும்
இந்த காலம்....
எது நடந்தாலும்
யாருக்காவும்
நிற்காமல்
தானுண்டு தன்
வேலையுண்டு
என்று சுயநலமாய்
சுற்றித்திரிகிறது
காலப்பறவை.....
முடிவில்லாமல்
எதுவும் இல்லை
பக்கம் பக்கமாய்
எழுதினாலும்
சிறு புள்ளியால்
முற்று பெறுகிறது....
எதுவாயினும்
வலிகள் கொன்றாலும்
உறவுகள் உதறினாலும்
புயல் வந்து ஓய்ந்தாலும்
நினைவுகள் அழிந்தாலும்
முன்னோக்கி முயல்வோம்
இதுவும் கடந்து
போகும் என்று
......
இதுவும் கடந்துபோகும்
ReplyDeleteஇருப்போற்கும்,இரப்போர்க்கும்
எவ்வித வேறுபாடும் இன்றி
இந்த நேரங்கள் மட்டும்...!
அழகிய கவிதை வாழ்த்துக்கள்