நீயும் நானுமாய்.......
என் கவிதை சு.மா.காயத்ரி
நீ என நீ என
தொடங்கிய உன் சந்திப்புகள்....
நீயாகவே முடிவுற்றன.....
நீ என நீதான் என
தொடங்கிய என் நாட்கள்
நீயும் நானுமாய்
அலைபேசியில் சுகமாய் முடிகிறது .....
நீயும் நானுமாய்
அலைபேசியில் சுகமாய் முடிகிறது .....
எண்ணில் அடங்காத
முறை உன் நினைவுகளில்
- தொலைகிறேன்: மீள வேண்டாம்
என்ற கொள்கையோடு....
நீயும் நானுமாய்
நகரும் இந்நாட்கள்
நாமும் நீயுமாய் முடியட்டும் .....
