Monday, 30 December 2013

யாரோ இவன் - கனவுப்புரவி மனிதன்...... என் கவிதை சு.மா.காயத்ரி


யாரோ இவன் - கனவுப்புரவி மனிதன்
என் கவிதை சு.மா.காயத்ரி











காரிருள் கானகத்தில்
தனிமையில் உதித்து
கனவுவென்ணும் புரவியில்
வலம் வந்தவன்...
ஜன்னலோர படுக்கையில்
கண்விழித்து பார்கையில்
என்னை கடந்து சென்றவன்....
மேகமென்னும் வாகனத்தில்
உருமாறி உருவம் மாறி
என்னை ஈர்த்தவன்
மழைகாற்றில் உதித்து
மண்ணின் வாசமாய்
காற்றில் வந்தவன்
தனிமையில் உழன்று உழன்று
நகர்ந்த நாட்களில்
அவனென்னும் கவிதைகளில்
என்னை தொலைத்தவள்
என்னில் பதியாத 
- அவன் முகமும்
எண்னில் உயிராடும் 
- அவனின் நினைவுகளும்
என் கண்ணீர் விதைகளில்
 - கவிதையாய் 
 முளைத்து வாழ்கின்றவன் 

Thursday, 26 December 2013

வட்டமிட்ட பூமி....... என் கவிதை சு.மா.காயத்ரி

வட்டமிட்ட பூமி
என் கவிதை  சு.மா.காயத்ரி













இன்று பார்த்தவை
எல்லாம் மறைந்து கொண்டிருக்கிறது
வட்டமிடும் பூமி பந்தின்
சுழற்சியில் ஈடுகொடுக்காமல்
என்றோ தொலைந்தவர்கள் 
எல்லாம் இன்று இங்கே
தடம்மாறி இடம்மாறி
கடந்தவர்கள் எல்லாம் இன்று 
வாழ்க்கை என்னும் வட்டத்தினுள்
சுற்றி சுற்றி தொலைகிறார்கள்
தொலைத்த உறவுகள்
தொலைத்த தொடர்புகள்
தொலைந்த மானுடர்கள்
தினம் தினம் வட்டம்
மாறி மாறி 
ஆடும் சடுகுடு ஆட்டம் 
இது வாழ்க்கை போராட்டம்
-          இவள்...