விடையில்லா
கேள்விகள்
என் கவிதை
சு.மா.காயத்ரி
சில
கணங்கள் பேசும்
மௌன
மொழிகள்....
உனக்கும்
எனக்குமாய்
என்னுள்
சிக்கி தவிக்கும்
வார்த்தை
மொழிகள்
வார்த்தை
இல்லா அகராதி....
தேடி தேடி
தொலையும்
மதி
இல்லாத நிம்மதி...
தினம்
ரசித்த காட்சிகள்
எல்லாம்
இன்று
மனம்
வெறுத்த நிகழ்வுகள்...
தவறவிட்ட
மனித்துளியாய்
மீண்டும்
கிடைக்காதவை
இவை விடை
இல்லா கேள்விகள்.....
# இவள்
