Saturday, 27 June 2015

மனதில் நின்ற சுவை - நானும் உணவும் - 1 என் கவிதை சு.மா.காயத்ரி

அன்பார்ந்த என் கவிதை வாசகர்களுக்கு : மனித வாழ்வில் நீங்காது இடம் பிடித்த உணவு, என் வாழ்வில் நான் தொலைத்த சுவை பற்றிய குறிப்புகள் , இனி பக்கம் பக்கமாய்

இன்று மாதம் ஆறு லகரத்தில் என் சம்பளம் இருந்தாலும் 
உலகின் மிக சிறந்த நகரத்தில் வாழ்ந்தாலும் 
மின்னி ஒளி மிளிரும் தலை சிறந்த உணவகத்தில் உணவுன்டாலும் 
இந்த சுவையை என்னால் பெற முடியவில்லை ...
# நான் தொலைத்த சுவை 


மனதில் நின்ற சுவை - நானும் உணவும் - 1
என் கவிதை சு.மா.காயத்ரி 



Picture Courtesy :http://cookclickndevour.com

கூடு விட்டு கூடுபாய்வது போல 
இங்கு கண்டம் விட்டு 
கண்டத்தில் வாழ்கிறேன் ....
சில சுவை நாவில் நிற்கிறது ...
சில சுவை மனதில் நிற்கிறது ...
சில சுவை என் நினைவில் 
நீங்காது நிற்கிறது ....
இன்று விழிக்கையில் 
என் மனம் என்னை 
என் வாழ்வின் பின்னோக்கி 
இழுத்துசென்றது ....
என் வாழ்வில் தனி இடங்களை பிடித்த 
சுவை சுவை ...
நான் ஒன்றும் மின்னி ஒளிரும் 
நகரத்தில் பிறக்கவில்லை 
காவிரி தலைவிரித்து ஓடும் கரையில் உள்ள 
சிறு கிராமத்தில் பிறந்தவள் ...
மழை வந்தால் மின்சாரம் இருக்காது ...
சாரல் அடித்து வாசல் முழுவதும்
காவிரியின் கிளை ஓடும்...
அந்த இரவுகளில் எங்கள் வீட்டில் 
எப்போதும் இருக்கும்
அரிசியும் பருப்பும் சாதம் ....
சிறு விளக்கொளியில் கொட்டும் மழையில் 
சுட சுட தட்டில் போட்டு
நன்கு காய்ச்சிய நெய்விட்டவுடன்...
மண்ணின் வசமும் , அந்த சோற்றின் சுவையும் .... 
இருட்டில் எங்கு என்ன என்று தெரியாமல் 
வருமே ஒரு மனம் சுவை திடம்...
தெய்வீகம்...வெளிச்சம் எதற்கு 
அதன் மனமே கையை இழுத்து செல்லும்
தேவமிர்ததுக்கு...
காலம் மாறிவிட்டது 
மனித கலாச்சாரங்களும் தான்.... 
இப்பொழுது மழைவந்தால் சுவடு கூட 
தெரியாமல் மறைந்து விடுகிறது...
கான்க்ரெட் தரைகளில்...
அந்த மழைச்சோறு  தொலைத்து 
இரண்டு நிமிட மாகிக்கு மாறிவிட்டது 
என் கிராமம் !!!!