Tuesday, 13 January 2015

என்ன இது..... என் கவிதை - காயத்திரி....

என்ன இது.....
என் கவிதை - காயத்திரி....


 
விழி மூடி உறக்கம் தழுவ மறுக்கிறது 
மணி நேர திரைப்படமாய் 
மனதில் புது புது நினைவுகள்....
சுழன்று சுழன்று 
எப்போது உறங்கினேன் என்று தெரியாமல் 
பல மணிநேரமாய் உறங்கினேன்....
மணியடித்தும் கண்டுகொள்ளாமல் !!!!
யாரையும் எதிர்கொள்ளும் 
தைரியம் நேற்றோடு மறைந்துவிட்டது....
எதையும்  தாங்கும் இதயம் 
இதோ  துளிர்விடுகிறது  இப்போது !!!!
உலகிலயே மிக பாதுகாப்பான இடம் 
இரண்டு தான் 
என்னை தழுவும் என் போர்வையும்...
என்னை அன்பால் நனைக்கும் குளியலறையும்.....
எவ்வளவு  நேரம் நனைந்தேன் என்று தெரியவில்லை
நனைந்து கொண்டிருக்கிறேன் 
நேரம் கடந்தும் 
நீரிலும் கண்ணீரிலும்....
புள்ளியால் முற்று பெறுமோ 
இல்லை முடிவில்லாமல் தொடருமோ 
என் சகாப்தம்...

விடை கண்ட புதிர்.....என் கவிதை சு.மா.காயத்ரி

விடை கண்ட புதிர்.....





என்ன சொல்வது 
எதெல்லாம் சொல்வது 
தொடங்கிய கதையெல்லாம் 
முடிவுக்கு தானே வரவேண்டும் 
இது முடிவில்லா தொடர்கதையோ....
விடையில்லா  புதிரோ 
தொடங்கிய நானே முடிக்க எனக்கு 
அனுமதியுமில்லை விருப்பமுமில்லை...
எல்லாம் கடந்து போகும் ...
ஆனால் எப்போது  ?
இன்று நாளை 
நாளை மறுநாள் 
மறுநாள்....முடிவில்லாமல் 
தொடர்ந்து தொடர்ந்து 
தொடருகிறது...இந்த புதிர் 
என்னிடம் விடையுண்டு  என அறியாமல்....

முடிவு தொடரும் .......