விடை கண்ட புதிர்.....

என்ன சொல்வது
எதெல்லாம் சொல்வது
தொடங்கிய கதையெல்லாம்
முடிவுக்கு தானே வரவேண்டும்
இது முடிவில்லா தொடர்கதையோ....
விடையில்லா புதிரோ
தொடங்கிய நானே முடிக்க எனக்கு
அனுமதியுமில்லை விருப்பமுமில்லை...
எல்லாம் கடந்து போகும் ...
ஆனால் எப்போது ?
இன்று நாளை
நாளை மறுநாள்
மறுநாள்....முடிவில்லாமல்
தொடர்ந்து தொடர்ந்து
தொடருகிறது...இந்த புதிர்
என்னிடம் விடையுண்டு என அறியாமல்....
முடிவு தொடரும் .......
No comments:
Post a Comment