Thursday, 31 January 2013

கனவுகள் பெரிய கனவுகள் ...... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

கனவுகள்  பெரிய கனவுகள் ......
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி
http://d13pix9kaak6wt.cloudfront.net/background/loritipton_1321586784_38.jpg

கனவுகள் உனக்கானவை
உன்னால்  மட்டுமே முடியும்......
கனவென்னும் வில்லால்
நம்பிக்கை என்னும் அம்பினை எய்து பார் ......
குறியை தாக்குகிறதோ இல்லையோ
எப்படியும் அதன் பக்கத்திலாவது வீழ்ந்து விடுவாய்.....
நீ என்ன வேரோடு சாய்ந்த மரமா
எழுந்து நிற்காமல் இருக்க......
வேரோடு சாய்ந்த மரம் கூட ......
அதன் விதை கொண்டு விருட்சமாக  எழவில்லையா .......
உன் கனவுகள்
உன்னால் மட்டுமே முடியும் ....
உன் கனவினை யாராலும்
சரியாக செதுக்க முடியாது உன்னை தவிர.......
வீழ்ந்து விட்டோம்.....
வீழ்ந்து விட்டோம்.....
வீழ்ந்து விட்டோம்.....என
வீழ்ந்து கிடப்பதை விட....
வீழ்ந்து தானே விட்டோம் என்று
எழுந்து பார் .......
உனக்கான கனவு தனக்கான சிற்பிக்காக
காத்து கொண்டிருக்கும்.......
எழுந்து நிற்க முடியாமல் திணறுவதால் தான்
பல கனவு சிற்பங்கள்
சிற்பி இல்லாமல் தவித்து கொண்டிருக்கிறது.....
நம்பிக்கை என்னும் வார்த்தையில் கூட
கை ஒடிந்து  விழுந்தால் கூட
நம்பி இரு என்னால் மட்டுமே முடியும் என்று......
வீழ்ந்து பார்......
எழுந்து பார் ......
வாழ்ந்து பார் .....
வாழ்கை அழகானது.......அர்த்தமுள்ளது.....
 

Wednesday, 30 January 2013

வலிகள் .... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

வலிகள் ....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

வலிகள் எத்தனை.....
விதம் வகை.......
வலிகள் யாருக்கும் புரிவதில்லை
வலி கொண்டவனை தவிர .....
வலியின் துணை எப்பொழுதும் கண்ணீர் ....
எழுத முடியாத எழுத்துக்கள் .....
பேச முடியாத வார்த்தைகள் .....
ஏற்க முடியாத நிர்பந்தங்கள் .....
சகிக்க முடியாத சூழ்நிலைகள் .....
விடை இல்லா கேள்விகள் .....
கண்ணீர் !!!!!
கண்ணீர் என்ன காவிரியா......
மடை திறக்க அனுமதி  வேண்டி காத்திருக்க ....
வலியின் விடை கண்ணீர்......
வலிகள் எல்லாம் கரைந்து போகும்
கண்ணீர் வாயிலாக .....
கண்ணீர் கொண்ட கண்கள் ....
தூய்மையாகும் வலி  கொண்ட இதயம்  போல .......
ரத்தம் புரட்சியின் விளைவு .....
பசி உணவின் துவக்கம் ....
கண்ணீர் எழுத்தின் ஆக்கம் .....
கண்ணீர் எழுத்தின் ஊக்கம் .....
என் கண்ணீர் என் எழுத்து .....








மரணம் ஈன்ற ஜனனம் ....... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

மரணம் ஈன்ற  ஜனனம் .......
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

மரணம் ....
உயிரின்  அமைதி ....
ஜனனத்தின் தோன்றல் ......
வாழ்வின் மகிழ்ச்சி  துக்கம் எல்லாம் பார்த்து
ஓய்ந்திருக்கும்....
ஒவ்வொரு மரணம் பல கண்ணீர் பல நிம்மதி
கடந்து செல்லும்.....
மரணத்தின் கண்ணீர் வலிமை வாய்ந்தது
நமக்கான கண்ணீர்
நம்மை நேசித்த....
நாம் நேசித்தவர்களின் பரிசு இறுதியாக ....
உயிரின் எடை கண்ணீர் .....
ஒவ்வொரு மரணத்தின் எல்லை.....
ஒவ்வொரு ஜனனத்தின்  தோன்றல்....
ஜனனம் மரணத்தின்
வாயில் தொட்டு.....
உயிரின் உருமாறி .....
தோன்றும் போது இடம் பொறுத்து
இன்பம் இன்பம்......
வேண்டாத இடத்தில ஜனனம்
கண்ணீர் கண்ணீர் ...
ஜனனம் மரணத்தின் எல்லை......