Sunday, 28 April 2013

என்ன இது ...... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி



என்ன இது ......
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

 

போகின்ற பாதையில்
என்
கண்ணில்  விழும்
பிம்பப்பூக்களை
சேர்த்து வைக்கிறேன்
உள் மனதில்......
யாருமில்ல வேளையில்
இடம்மாறிய இதயம்
என் இருவிழி உடுருவும்
மாயமென்ன ......
எங்கோ செல்கையில்
என்றும் என்னை துரத்தும்
உன் நினைவு கண்ணாடி .......
கண்ணாடி அறைகளில்
என் முன்னாடி இல்லையானாலும்
என்னோடு இருக்கும்
உன் நினைவு வாசனைகள் ......
ஊரே உறங்கும் வேளையில்
என் இதயம் உறங்குவதில்லை
விழி உறங்கினாலும் ......
பக்கம் பக்கமாய் உறங்கினாலும்
தீராத என் மை பேனாக்கள் ....


# என்ன இது !!!!!!

Saturday, 27 April 2013

நான் நீ என்றொரு நாம்..... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி



நான் நீ என்றொரு நாம்.....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி
 

நான் நீயாகி போனேன்
நீ நான் நீயாக
வேண்டும் என்ற வேளையில்.....
நான் நானாகவும்
நீ நீயாகவும் தொடங்கிய
சந்திப்புகள் ........
என்னை ஈர்த்த நாட்களில்
சில கணங்கள்
நீயாகி போனேன் ........
விரல் கோர்த்து
இதழ் சேர்த்து
சில வேளைகளில் நீ
என்னை நீயாக்கினாய் .......
நானும் நீயும்
நானும் நீயுமாகி
நான் நீயாகி போனேன்
நான் நீ என்ற போது ........
மனதிற்கினிய சில கணங்கள்
நான் என்னில் நீயாகி போகிறேன்
நான் + நீ என்றொரு
நாம் நாம் நாம் .......

Friday, 26 April 2013

என்னோடு வா ..... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி



என்னோடு வா .....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

baloons, boy, girl, love
தொலை தூரம் செல்வோம்
தொலைந்து போவோம்
என்னில் நீயுமாய்
உன்னில் நானுமாய் ......
கடக்காத தூரம் எல்லாம்
கடப்போம் கிடப்போம்
நம்மை மறந்து .......
என்னை மீறி நீ
செய்யாத செயல்களும்
உன்னை மீறி
நான் செய்யாத செயல்களும்
வா செய்யலாம்
நம்மையும் மீறி
ஒரு அளவோடு சில கனவோடு .......
என்னோடு எப்பொழுதும் வேண்டாம்
என் விழி கருமணியில்
உன் பிம்பம் தெரியும் வரை
மட்டும் போதும் ......
எப்பொழுதும்
குளக்கரை கொக்காய்
வடைக்கான காகமாய்
நிலவுக்கான வானமாய்
எனக்கான நீ ........
மண்ணோடு மழை வாசம்
கரையோடு புயல் வீசும்
நொடிகள் போலத்தான்
என்னோடு நீ இருக்கும் போது
என் சுவாசம் ........
தொலைந்து போகிறேன் உன்னில்
உன்னில் என்னை
எக்கணமும் தொலைத்து விடுகிறேன் .......
தேடுகிறேன் என்றோ என்னில்
தொலைத்த உன்னை ........

# என்னோடு வா !!!!!



Tuesday, 9 April 2013

என் இனிய பொன் நாள் ........என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி



சுட்டெரிக்கும் வெயில் ஒளி
ஜன்னல் வழி வந்து
கண் கூசி
என் இமை உள்ளே உடுருவி
என்னை விழிக்க வைத்தது !!!!!
அவன் அவன் வேளைக்கு
அவன் அவன் செல்கிறான்
போகிற போக்கில் அடித்து 
செல்லும் ஒலி வெள்ளம்
வாகன இரைச்சல்
காது வழியே ஊடுருவி
என்னை எழுப்பி விடுகிறது!!!!
பக்கத்து வீட்டில் பாடு கேட்க
தெருவிற்கே ஒலி வைத்து
இம்சை தருகிறார்கள் !!!!
இரவில் சார்ஜில் போட்டு
தூங்கிய கை பேசியில்
எவனோ அழைத்த விடுபட்ட அழைப்பும்
தவறாது அனுப்பும் குறுஞ்செய்தியை
அரை கண்ணால் பார்த்து
கண் மூடுவதில் ஒரு சுகம் !!!!!
காற்று வராமல் கண் திறந்தால்
பேன் போடு என்றால் 
கரண்ட் போய் பத்து நிமிஷம்
ஆச்சு என்கிறது ஒரு குரல் !!!!!
பாட்டு சத்தம் நின்றாச்சு
கரண்ட் போயாச்சு
வேர்வை வந்தாச்சு
தூங்கவும் முடியாது
நேரம் ஆச்சு
மெஸ் கிளோஸ் பண்ண போறாங்க
என்றதும்
அடித்து பிடித்து குளிக்க ஓடினால்
கொட்டும் தண்ணீர் போல்
வேகமாய் தொடங்குகிறது
 என் இனிய பொன் நாள்  ......