Saturday, 6 April 2013

யார் யாருக்கு என்ன வேணும் வேணும்........என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி



யார் யாருக்கு என்ன வேணும் வேணும்

 
மாடி வீட்டு எஜமானி அம்மாள்
வீட்டில் கேட்டு கொண்டிருந்தாள்
யார் யாருக்கு என்ன வேணும் என்று
கணவன் சொன்னான் சண்டே
சிக்கன் கொழம்பு
மூன்றாம் குட்டி சொன்னது
மீன் தொட்டி வேணும்
இரண்டாம் குட்டி சொன்னது
டெட்டி பியர் அப்றோம் நாய் குட்டி
முதல் குட்டி சொன்னது
நெறைய சாக்லேட்
மாடி வீடு ஓரம் குடியிருக்கும் குடிசை
வீட்டு பாப்பா சொன்னது
யாருக்கும் கேட்காமல் மெதுவாய்
.
.
.
.
.
" சோறு வேணும் ".........

No comments:

Post a Comment