பெண்ணும் கல்வியும்
என் கவிதை சு.மா.காயத்ரி

சார்ந்து சார்ந்து
சோர்ந்து போனவர்கள்
இந்த பெண் பாலினங்கள்....
தகப்பனை சார்ந்து
சகோதரர்களை சார்ந்து
கணவனை சார்ந்து
பின் பிள்ளையை சார்ந்து....
என் இந்த தயக்கம்...
வளர்ந்தால் ஒன்றும் வீழ்ந்து
விட மாட்டோம்...
வீழ்த்தியும் விட விட மாட்டோம்...
வீழவும் விடமாட்டோம்...
அறிவியல் வளர்ச்சியில்
தூரம் போகும் இந்த உலகம்...
பதினெட்டு ஆயிற்றா
மணவாளனை தேடுவதை
விட்டுவிட்டு...
நல்ல கல்லூரியை தேடுங்கள்...
ஆண் கல்வி நம் வீட்டுக்கு மட்டும்
தான்....
பெண் கல்வி இந்த நாட்டிற்கு...
கல்வி எனும் மூன்றெழுத்து மந்திரம்
ஒரு மாயச்சொல்...
பெண்மையின் துணை !!!
தனி ஒருவனின் துணை சார்ந்து
நில்லாமல்...
இவளின் துணை சார்ந்து பலர்
நிற்க
பெண் கல்வி அவசியம்...
மகளாகி
மனைவியாகி
தாயாகி
முடிவதில்லை இந்த வாழ்கை....
பட்டங்கள் வாங்கியும்
சட்டங்களை ஆண்டும்
முடியவேண்டும் இந்த பெண்களின்
வாழ்கை....
பெண் கல்வி வீட்டிற்கு அல்ல
நாட்டிற்கு...
பெண்களை பேணுவோம்
கல்விக்கு குரல் கொடுப்போம்...


