Friday, 31 August 2012

நான் நானாக இல்லை ......என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

நான் நானாக இல்லை ......என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


இப்போதெல்லாம் நான் நானாக இல்லை ..
உதிர்ந்துகொண்டே உள்ள விழிதுளிகளும் ....
பூக்காத புன்னகைகளும் ...
வாழ்க்கையை வெறுமையாக்குகின்றது..
யாருமில்ல சாலையில்
கால்நோக
உயிர்போக நடக்கவேண்டும் .....
எப்பொழுதும் .....
எனக்காக நடந்த நண்பர்கள் யாருமில்லை ...
இப்பொழுது ....
தட்டு தடுமாறி நடந்து கொண்டிருக்கிறேன் ..
தன்னந்தனியாக .......
எனக்காக எப்பொழுதும் நிற்காத
நேரங்களும்...
மின்சார ரயில்களும் ......
வியப்புட்டுகிறது !!!!!!!!
ஆனாலும் நான் நேசிக்கிறேன்
எனது அன்றாட வாழ்க்கையை !!!!!

 

Saturday, 25 August 2012


மழையும் நானும்  :என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி
 











மழை கண்ட நான் மழலையானேன்!!!!!!
மனதால்........
தெறித்து விழும் நீர்த்துளியால்
தெளிந்த நீரோடையனேன் .........
மழை தந்த மண் வாசம்
என் மனவாசம் கண்டேன்.........
விழும்  துளிகள்
நீர்த்துளியா!!!!!!!!!!!!!!!!
கண்ணீர்துளியா !!!!!!!!!!!!!!!!!
துரத்தி விழும் மழைத்துளியும்
விழியோரம் வழியும்
விழித்துளியும் ஒன்றே ......
இது விழியும் மழையும் நனைந்த கவிதை....... 

Friday, 24 August 2012

யாரவன் .....? என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி


யாரவன் .....? என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


உன்னை தினமும் தேடுகிறேன் .........
காரிருள்     நேரங்களில்  எல்லாம்
கண் விழித்திருக்கிறேன்
என் கனவின் ஓரங்களில் நீ வருவாய் என்று!!!!! ....
விழி முடியே காத்திருக்கிறேன் .....
நான் பயணிக்கும் ரயிலின்  நிறுத்தங்களில்  ....
ஒரு முறையேனும் உன்னை சந்திப்பேன்
என்ற நம்பிக்கையோடு  பயணித்து கொண்டிருகிறேன்!!!! 
ஒவ்வொரு  முறையும்  பேருந்து  ஏறுகையில் 
பயண   சீட்டு வாங்க கூட மறந்து விடுகிறது!!!! ....
எவ்வகை  கூட்டத்திலும்
என்  இரு  கண்கள்  உன்னையே  தேடுகிறது.......
கடந்து  செல்லும்  யாரை  பார்த்தாலும் 
நீயாக இருப்பாயா  என நினைக்கத் தோன்றுகிறது  .....
உன்னை  காணும் 
நாட்களை   தேடி  தேடியே ......
நாட்காட்டி  தீர்ந்துவிட்டது ......
நீ இருப்பாய்  என்ற  நம்பிக்கையில் ....
காரிருளின்  கடைசி  நிமிடங்கள்  வரை 
விழித்திருக்கிறேன்....
காரிருள்  ஓவியங்கள்  வரைந்த கள்வன்  நீ  யாரென்று ?????

Wednesday, 22 August 2012

பயணங்களை நேசிக்கிறேன் :என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


கடந்து செல்லும் பாதையில்
கன நொடிகள் மட்டும் நிற்கிறேன் .......
பார்த்து சென்ற பாதை தான்
அலுக்கவே இல்லை ........
நான் ஜன்னலோர காதலி !!!!!!!
ஜன்னலை காதலிக்கவில்லை
ஜன்னல் வழி படங்களை காதலிக்கிறேன் .........
பார்த்து செல்லும் முகங்கள் சலிக்கவே இல்லை
சகித்து கொள்கிறேன் ........
முற்று புள்ளி இல்லாத பயணம் ....
முன்னோக்கியே செல்கிறது ......
பின்னோக்கி பாய்வது இல்லை ......
வாழ்கையும் முன்னோக்கி மட்டும் சென்றால்
என்னவாகும் ?????
நினைவுகள் மறந்திருக்கும் ......
அழகிய உறவுகள் தொலைந்து இருக்கும் ......

CHENNAI DAY

இன்று  373 வது சென்னை நாள்:என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


இன்று நீ மலர்ந்த நாள் ....
உன்னால் பலருக்கு அடையாளம் சென்னை வாசி என்று .....
உன்ன உணவின்றி......
உடுத்த உடையின்றி......
உறவுகளை தொலைத்த......
பலரை  வரவைக்கிறாய் வாழவைக்கிறாய்.....
பலதரப்பட்ட மக்கள் ...
பல்வகை மொழிகள் ...
பண்கலை முகங்கள் .......
பல்சுவை உணவுகள் .......
பற்பல இடங்கள் .....
இன்பம் இன்பம் ...
என்றும் இன்பம் இன்பம் ...
மனம் விட்டு பேச மெரீனா .....
மனம் தொலைத்து கற்க அண்ணா நூலகம்.....
ரயிலை நேசிக்க சென்ட்ரல்......
மக்களின் கூடல் தி நகர் .......
உலகம் ஒரு நாடக மேடை ....நடிகனாக  கோடம்பாக்கம் ........
மழைகால சாலைகள் கிராமத்து சிற்றாறுகள் ....
சாலையோர தேநீர் கடைகள்
அமிர்தம் அமிர்தம் ......
வெய்யில் காலம் .....
வெண் பஞ்சும் பற்றிகொள்ளும் ....
தீ காலம் ......
நீரும் தேனாகும் ...
காற்றும் சூடாகும்...
ஜில்லென்று பானமும் .....
மரகாற்று நிழலும் இன்பம் இன்பம் ....
என்றும் இன்பம் இன்பம் ......
உன்னில் நான் வாழ்கிறேன் .......
என்னை வாழவைக்கிறாய்
உன்னை சுவாசிக்கிறேன் ......
உன்னை நேசிக்கிறேன் .....
என் உயிரினும் மேலான எழுத்துக்களில் நீ வாழ்கிறாய்.......
வாழ்வாய் ......
நான் வாழ்ந்த பின்பும்......

Tuesday, 21 August 2012

நான் தேநீர் காதலி ....

என் கவிதை .......
நான் தேநீர் காதலி ....
                                          - கவித்திரி சு .மா.காயத்ரி
யாரை விடவும் தேநீரை மிகவும் நேசிக்கிறேன் ..........:)
உன் மிதமான சூட்டில் நான் இதமாகிறேன் ......:)
எல்லோரையும் புரிந்து கொள்ள முடியவில்லை .......
என்னை எப்பொழுதும் புரிந்து கொள்வது தேநீர் மட்டுமே ......
மழை பெய்யும் ஓர் மாலை வேளையில் .....
யாரும் இல்லை என்னுடன் ..........
நானும் இல்லை என்னிடம் ..........
நீ மட்டும் என் மேஜையில்.....எனக்காக காத்திருக்கிறாய் ....
எப்போது என்னுள் செல்லலாம் என்னை வெல்லலாம் என்று .......