Wednesday, 22 August 2012

பயணங்களை நேசிக்கிறேன் :என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


கடந்து செல்லும் பாதையில்
கன நொடிகள் மட்டும் நிற்கிறேன் .......
பார்த்து சென்ற பாதை தான்
அலுக்கவே இல்லை ........
நான் ஜன்னலோர காதலி !!!!!!!
ஜன்னலை காதலிக்கவில்லை
ஜன்னல் வழி படங்களை காதலிக்கிறேன் .........
பார்த்து செல்லும் முகங்கள் சலிக்கவே இல்லை
சகித்து கொள்கிறேன் ........
முற்று புள்ளி இல்லாத பயணம் ....
முன்னோக்கியே செல்கிறது ......
பின்னோக்கி பாய்வது இல்லை ......
வாழ்கையும் முன்னோக்கி மட்டும் சென்றால்
என்னவாகும் ?????
நினைவுகள் மறந்திருக்கும் ......
அழகிய உறவுகள் தொலைந்து இருக்கும் ......

No comments:

Post a Comment