Friday, 24 August 2012

யாரவன் .....? என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி


யாரவன் .....? என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


உன்னை தினமும் தேடுகிறேன் .........
காரிருள்     நேரங்களில்  எல்லாம்
கண் விழித்திருக்கிறேன்
என் கனவின் ஓரங்களில் நீ வருவாய் என்று!!!!! ....
விழி முடியே காத்திருக்கிறேன் .....
நான் பயணிக்கும் ரயிலின்  நிறுத்தங்களில்  ....
ஒரு முறையேனும் உன்னை சந்திப்பேன்
என்ற நம்பிக்கையோடு  பயணித்து கொண்டிருகிறேன்!!!! 
ஒவ்வொரு  முறையும்  பேருந்து  ஏறுகையில் 
பயண   சீட்டு வாங்க கூட மறந்து விடுகிறது!!!! ....
எவ்வகை  கூட்டத்திலும்
என்  இரு  கண்கள்  உன்னையே  தேடுகிறது.......
கடந்து  செல்லும்  யாரை  பார்த்தாலும் 
நீயாக இருப்பாயா  என நினைக்கத் தோன்றுகிறது  .....
உன்னை  காணும் 
நாட்களை   தேடி  தேடியே ......
நாட்காட்டி  தீர்ந்துவிட்டது ......
நீ இருப்பாய்  என்ற  நம்பிக்கையில் ....
காரிருளின்  கடைசி  நிமிடங்கள்  வரை 
விழித்திருக்கிறேன்....
காரிருள்  ஓவியங்கள்  வரைந்த கள்வன்  நீ  யாரென்று ?????

1 comment: