Monday, 15 October 2012

இது எனக்கான உலகம் இல்லை!!!!என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

இது எனக்கான உலகம் இல்லை!!!!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


தடம் மாறி இடம் மாறி
இடறிய பயணம் இது......
யாராலோ எப்போதோ
எதிலெதிலோ நிலையாய்
நிச்சயக்கபட்டவை எல்லாம் !!!
எனக்கானவை எல்லாம்
தீர்மானிக்கபட்டுவிட்டது !!!
இந்த மிருகத்தனமான
மனித வாழ்கையில் ...
பந்தங்கள் என்னும் வலைகளில் சிக்கி
எப்பொழுதும் யார் யாருக்கோ
கடமைபட வேண்டியுள்ளது !!!!
கடைசி கண் மூடி
மண் மூடினால் கூட
பந்தங்கள் துரத்துகிறது  !!!
சார்ந்து வாழ்ந்து வாழ்ந்து
சோர்ந்து போய்விட்டேன்
பலரின் பலகட்ட ஆலோசனைகள்
என்னென்ன செய்ய வேண்டும்
என்ற அறிவுரைகள்
தயாராகும் வாழ்கை பாதை !!!!
யாருக்கும் தோன்றவில்லை
நடக்கும் என்னிடம்
ஒருவார்த்தை கேட்கலாம்  என்று....
காரணமில்லாமல் எதேனும் நடந்தால்
கேள்விகனைகளால் துளைபட்டு
சாவதை தவிர வேறுவழி இல்லை !!!
இந்த அற்பமான மானிட உலகத்தில்
கனவுகள் எல்லாம் நெருங்கி வரும் சமயம்
கானல் நீராகி விடுகிறது ....
எல்லாம் தீர்மானிக்கபட்டவை
திசை திசையாய் பறந்தாலும்
ஒரே திசை ஒரே மக்கள் !!!!
இது எனக்கான உலகம் இல்லை!!!!

Wednesday, 10 October 2012

மாற்றங்கள் !!!என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

மாற்றங்கள் !!!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


அன்று மலர்ந்த  அல்லி போல
அகம் மலர்கிறேன்!!!
முன் நாளில் என்னை கவர்ந்தவை எல்லாம்
படங்களாய் ஓடிக்கொண்டிருக்கிறது
கண் முன்னே !!!
ஆதவனோடு காய்ந்த கருங்கூந்தல்
காற்றில் அலையோடி
முகம் தீண்டும் ஸ்பரிசம் !!!!
நுனி வரை நகம் கடித்து
நினைக்கும் யோசனைகள் !!!
எங்கெங்கோ நடக்கும் போது
எதிர்படும் கண்களில்
கணநொடி காதல்கள் !!!
மனம் விரும்பிய மைப்பேனா
சிக்கிகொண்டது எங்கோ
ஓடி ஒளிகையில்
 அதன் துணையோடு!!!!
எப்போதும் தூர விலகி செல்லும்
தெரு நாய் கூட
காவலாய் வீடு வந்தது இன்று!!!
எப்போதும் பல அடி தள்ளி நிற்கும் பேருந்து
நான் நிற்கும் இடத்தில்
இன்று நின்ற போது !!!
பல மணி நேரம் காத்திருந்தவர்களுக்கு
ரயில் வரவில்லை
நான் சென்று நின்றவுடன்
வந்து நின்றது !!!
நீர் வேண்டி விக்கல் எடுக்கையில்
நினைவில் நின்றவர்
ஒருவர் மட்டுமே!!!
யாரோடும் பேசாத எதிர் வீடு அக்கா
என் பெயர் கேட்ட போது !!!
யாரை பார்த்தாலும் மிரண்டு அழும்
குழந்தையின் முத்தம் எனக்கு !!!
எதேச்சையாக வானொலியில் என் மனம்
கவர்ந்த பாடல் !!!
சன்னலோர மழை.......
முகத்தோடு அலை....
மாற்றம் யாரோடும் எங்கேயும் எப்போதும்!!!!

Saturday, 6 October 2012

மழையோடு வந்தவன் மனதோடு நின்றவன் என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

மழையோடு வந்தவன் மனதோடு நின்றவன் !!!!!!!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


உடல் சோர்ந்து உலகம் மறந்த ஒரு நாள்!!!
கண்ணீர் தீர்ந்து கடல் வற்றிய ஓர் பொழுது !!!
மழைவேண்டி மனம் ஏங்கியது ....
யார் யாரோ நடந்து செல்லும் ஒரு பாதை!!
சாலை ஓர மரங்களில் வெண்பனி பூக்கள் !!!
சில்லென்று காற்று ......
சட சடவென்று மழை .....
தட தடவென்று ஓடும் மக்கள்....
மழை !!!அடுக்கடுக்காய் திரை சீலை போல
பெய்துகொண்டிருந்தது ....
மழை விட்டு ஓட மனம் ஒப்பவில்லை !!!!
திரை சீலைகள் திறக்கவில்லை !!!
யார் மீதோ மோதிகொண்டேன்!!!
கைகள் மட்டும் பேசி கொண்டன
ஸ்பரிசமாய் இரு வார்த்தைகள் !!!!
இடிகள் முழங்கின ....
இடம் பெயர்ந்தோம் ...
திசைகொருவராய் !!
மழையும் நின்றது ...
நீயும் நின்றாய் ....
என் மனதோடு !!!!!

Monday, 1 October 2012

பாதைகள் ...என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

பாதைகள் ...என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


நீண்டு கொண்டே உள்ளது
நீண்ட இடைவெளி இல்லாமல் !!!
முடிகிறது என்று முன்னோக்கி நடந்தால்
பிரிந்து செல்கிறது பாதையின் முடிவில் !!!
சற்று இடம் மாறி நடந்தால்  கூட
முழுவதும் தடம் மாறி விடுகிறது !!!
பாதைகள் ......பயணிப்பவர்களுக்கு மட்டுமல்ல
பயணிப்பவர்களை பார்பதற்காக கூட !!!
பாதைகள் .....
நெளிவும் சுளிவுமாய் !!
குறுகும் நெடுக்கும் !!
நேராய் வளைவாய் !!
தடையேதும் இல்லாமல் தொடர்கிறது !!
கையால் அளந்து பார்த்த தூரம் - சிறிதெனினும்
காலால் நடக்கும் தூரம் - பெரிது !!!
பயணம் முடியலாம்
ஆனால் பாதைகள் முடிவதில்லை !!!