Monday, 15 October 2012

இது எனக்கான உலகம் இல்லை!!!!என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

இது எனக்கான உலகம் இல்லை!!!!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


தடம் மாறி இடம் மாறி
இடறிய பயணம் இது......
யாராலோ எப்போதோ
எதிலெதிலோ நிலையாய்
நிச்சயக்கபட்டவை எல்லாம் !!!
எனக்கானவை எல்லாம்
தீர்மானிக்கபட்டுவிட்டது !!!
இந்த மிருகத்தனமான
மனித வாழ்கையில் ...
பந்தங்கள் என்னும் வலைகளில் சிக்கி
எப்பொழுதும் யார் யாருக்கோ
கடமைபட வேண்டியுள்ளது !!!!
கடைசி கண் மூடி
மண் மூடினால் கூட
பந்தங்கள் துரத்துகிறது  !!!
சார்ந்து வாழ்ந்து வாழ்ந்து
சோர்ந்து போய்விட்டேன்
பலரின் பலகட்ட ஆலோசனைகள்
என்னென்ன செய்ய வேண்டும்
என்ற அறிவுரைகள்
தயாராகும் வாழ்கை பாதை !!!!
யாருக்கும் தோன்றவில்லை
நடக்கும் என்னிடம்
ஒருவார்த்தை கேட்கலாம்  என்று....
காரணமில்லாமல் எதேனும் நடந்தால்
கேள்விகனைகளால் துளைபட்டு
சாவதை தவிர வேறுவழி இல்லை !!!
இந்த அற்பமான மானிட உலகத்தில்
கனவுகள் எல்லாம் நெருங்கி வரும் சமயம்
கானல் நீராகி விடுகிறது ....
எல்லாம் தீர்மானிக்கபட்டவை
திசை திசையாய் பறந்தாலும்
ஒரே திசை ஒரே மக்கள் !!!!
இது எனக்கான உலகம் இல்லை!!!!

No comments:

Post a Comment