Thursday, 28 February 2013

இது நமக்கு மட்டும் ..... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி




இது நமக்கு மட்டும் .....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

 

மொட்டை மாடி போதும் என்றேன்....
நானிருக்கிறேன் என்றாய்
இன்னும் கொஞ்சம் மேலே
தண்ணீர் தொட்டி ஏறினோம் ....
நம்மிரு தலை சாய்த்து
மேக உருவங்கள் பேசினோம்
நான் முயல் என்றேன் ....
நீ மான் என்றாய் !!!!
நட்சத்திரங்கள் நகர்கிறது என்றேன் .....
மேகம் நகர்கிறது என்றாய் நீ !!!
நிலவில் ஒரு பெண் என்றேன்....
நீ இல்லை பாட்டி தாத்தா என்றாய் !!!!
தூர போகும் விமான வெளிச்சம்
கண் கூசுவதாய் சொன்னாய் ......
பொய் சொல்லாதே என்றேன்
நீ எப்போதும் என்னை நம்புவதில்லை என்றாய் !!!!
என்னென்னவோ பேசினாய்
உன்னோடு தான் இருந்தேன் நினைவுகளில்
ஆனால் எனக்கான கனவில் !!!!
மழை வருகிறது என்றாய்
தூறல் என்றேன் நான் !!!!
இங்கிருந்து விழுந்தால் என்னவாகும் என்றேன்
நல்ல அழகான பெண்ணை
திருமணம் செய்வேன் என்றாய் .....
உன்னிடம் ஒன்று கேட்பேன் என்றேன்
சரி கேள் என்றாய்....
ஒன்றும் இல்லை என்றேன்
பொய் சொல்கிறாய் என்றாய் நீ ....
சரி போகலாம் என்றேன்
சொல் சொல் என்றாய்
என்ன சொல்லட்டும் என்றேன் ....
எதாவது என்றாய் ....
எனக்கு தூக்கம் வருகிறது என்றேன் ...
போடி என்றாய் ...
போடா என்றேன் ....
சரி வா போகலாம் என்றாய்......
ஊரெல்லாம் உறங்கி விட்டது
கதை பேசி ....
நம் கதை முடிவில்லா தொடர்கதை !!!!

தொடரும்......
இது நமக்கு மட்டும் .....


Wednesday, 27 February 2013

உன் பார்வையில் .... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி



உன் பார்வையில் ....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி
 
உன் பார்வையில் ஓராயிரம்
கனவுகள் என்னோடு ......
நான் வராத நாட்களில் எல்லாம்
எப்போதும் போல
நின்று தவிக்கிறாய் பேருந்து நிறுத்தத்தில்
பார்வையில் ஏக்கத்தோடு !!!!!
கடுகிட்டலும் விழாத கூடத்திலும்
உன் கண்கள் என்னை
தேடியே பசித்திருக்கிறது
   !!!!
விழி களைத்து
இமை மூடி கிடந்தாலும்
என் கண்கள் உன் முகமே கேட்கிறது !!!!
வெட்ட வெளியில்
நிலவொளியில்
 மட்டுமல்ல
கனவொளியில்
  கண் திறந்து கிடந்தாலும் 
உன் முகமே
 தோன்றுதடா !!!!
நினைவோடு உன்னை மறந்திருந்தாலும்
கண்களோடுதான்
  வைத்துள்ளேன்
உன் பார்வையை !!!!
மழை பெய்த மாலையில்
தெளிவான பூமி போல
உன் பார்வை மிக
தெளிவு என்னை பார்கையில் !!!!



உன் பார்வையில் ....

 

Tuesday, 26 February 2013

எவனோ ஒருவன் ...... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

எவனோ ஒருவன் ......
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி




மெல்ல வீசும் தென்றல் 
எதிர் படும் காற்றில் கரைந்து
என்னை கரைய வைப்பவன் ......
இமையாலும்
 என் மனதாலும் !!!!!
விளகனைந்த பின்பும்
அழியாத சிறு தீ பொறியாய்
நான் அணைந்த பின்பும்
என்னில் சிறு தீயாய் தவிப்பவன் !!!!
என் கனவென்னும் பயணம்
முடிந்த தருவாயில்
என் விழியோரம் நின்று
 
சென்று விடவா என அனுமதி கோருபவன் !!!!
என் வார்த்தை என்னும்
தீயில் வாட்டினாலும்
விட்டில் பூச்சியாய்
அமைதியாய்
 என்னில் விழுபவன் !!!!
ஊரடங்கிய பின்பும்
ஏதோ ஓர் திசையில்
ஒளிரும் விளக்காய்
என்றும் என்னில் ஒளிர்பவன் !!!!!
என் இமை மூடி கிடந்தாலும்
உடல் சோர்ந்து விழுந்தாலும்
துடித்து கொண்டிருக்கிறான்
என் இதயமாய் !!!!!

எவனோ ஒருவன்......