Friday, 1 February 2013

ஏதோ செய்கையில்..... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

ஏதோ செய்கையில்.....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி


ஏதோ செய்கையில்......
என்னென்னவோ  உணர்த்தி விட்டாய் ......
ஏதோ எண்ணங்கள் .....
உனக்கான எனக்கான கனவுகள் ......
எல்லாம் எங்கோ நடந்தது போல இருக்கிறது......
தினமும் நடப்பது தான்
ஆனால் ஏனோ மனப்பதிவு தான் செய்ய இயலவில்லை ....
நமக்கான முடிவுகள்
நாமாக தான் எடுத்தோம்.....
எல்லாம் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையில்....
எதுவும் நடக்காத போது
நமக்கான முடிவுகள் மட்டும் ஏன் மாற்ற வேண்டும்......
நானாக எதுவும் சொல்லவில்லை
நீயாக தானே எடுத்தாய்
நீயாக முடித்துவை .....
நமக்கான  முடிவு என்று இனி ஒன்றும் இல்லை .....
உனக்கான முடிவை நீ சொன்னால்
எனக்கான முடிவு என்று ஒன்று இருந்தால்
நானும் சொல்கிறேன் ....

No comments:

Post a Comment