Monday, 25 February 2013

என்னை ஏதோ செய்து விட்டாய் ....... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி



என்னை ஏதோ செய்து விட்டாய் .......

என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

இரவு நேர மெல்லிசை.....
ஆகாயத்து வெண்ணிலா .....
ஊர் கோல மேகங்கள் .....
மேனி மினுக்கும் நட்சத்திரங்கள் ......
சில்லென்று பனிகாற்று ....
என்னை மறக்க செய்து விட்டது ....
யாரோடும் நின்று செல்லாத என் கால்கள்
இன்று யாருக்காக  நிற்கிறது ....?
தனிமை தேநீர்  கோப்பைகள் இன்று
துணை தேடி காத்திருக்கிறது ....!
நிற்காத காலங்கள் ....
என்னை நிகழ்காலம் மறக்க செய்கிறது !!!!
கனவாய் நினைத்த எல்லாம் .....
நிகழ்வாய் நடந்து திளைக்க செய்கிறது !!!!
எங்கோ பார்த்தவை எல்லாம்......
இன்று என் முன்னே !!!!
எல்லாம் இப்படித்தான் என
எண்ணவும் இல்லை.....
இப்படி எதுவும் இல்லை
என நினைக்கவும் இல்லை......
வானம் தேடிய சூரியனாய் ......
பூக்கள் தேடிய வண்டுகளாய் .....
வறண்ட பூமி  தேடிய நீர் துளியாய்....
என்னை தேடி.....
எனக்கானவைதானா  என்று தெரியவில்லை........
ஆனால் எனக்கு மட்டும் என அறியேன் !!!!!!   
 
இது போதும் எனக்கு

இது போதுமே ........

No comments:

Post a Comment