Thursday, 25 July 2013

இது முரண்பாடு..... என் கவிதை சு.மா.காயத்ரி



இது முரண்பாடு
என் கவிதை சு.மா.காயத்ரி

 

மழை பொய்த்துவிட்டது
என்றாய்
என் கண்கள் குளமாகி
நிற்கிறது
பார்த்துவிடுவாயோ என்ற
பயத்தில்
கானல் நீரில் நனைந்து
நிற்கிறேன்.....
உன் நினைவுகள் சுமந்து
சுமந்து
என் நெஞ்சுகூடு
வெம்பி நிற்கிறது .....
என்னவாகும் என்னவாகும்
என்றே தெரியாமல்
வெறுமையாய் போகும்
எந்தன் நாட்கள்......
கூந்தலை சேரா
கல்லறை பூக்களாய்
உன்னை சேர
முடியாமல் இங்கு நான் .....

Saturday, 20 July 2013

இதுவும் கடந்து போகும் .... என் கவிதை சு.மா.காயத்ரி



இதுவும் கடந்து போகும் ....
என் கவிதை சு.மா.காயத்ரி

 


கணங்களாய்
நொடிகளாய்
நிமிடங்களாய்
மணிகளாய்
நிற்காமல் ஓயாமல்
ஓடிக்கொண்டிருக்கும்
இந்த காலம்....
எது நடந்தாலும்
யாருக்காவும் நிற்காமல்
தானுண்டு தன் வேலையுண்டு
என்று சுயநலமாய் சுற்றித்திரிகிறது
காலப்பறவை.....
முடிவில்லாமல் எதுவும் இல்லை
பக்கம் பக்கமாய் எழுதினாலும்
சிறு புள்ளியால்
முற்று பெறுகிறது....
எதுவாயினும்
வலிகள் கொன்றாலும்
உறவுகள் உதறினாலும்
புயல் வந்து ஓய்ந்தாலும்
நினைவுகள் அழிந்தாலும்
முன்னோக்கி முயல்வோம் 
இதுவும் கடந்து
போகும் என்று ......

Friday, 19 July 2013

இது காதல் காலமடி..... என் கவிதை சு.மா.காயத்ரி


இது காதல் காலமடி.....
என் கவிதை சு.மா.காயத்ரி

 


மேகம் மயங்கி
சூரியனிடம் லயித்திருக்கிறது
மேகமூட்டமாய்
அந்தி மழை நேரம்.....
மரங்களினூடே
சிதறி தெறிக்கும்
சிறு சிறு நீர் துளி
யாருமில்லா சாலை
நம்மிரு இதயத்துடிப்பு......
சேரத்துத்துடிக்கும்
தேநீர் கோப்பைகள்....
நமக்கு பிடித்த பாடல்
சுமந்து சுற்றும் இசைத்தட்டு
குளிர் காற்று அணைப்பு
திகட்டாத முத்தங்கள்.......
யாருக்கும் கேட்காமல்
உனக்கு மட்டும்
ரகசிய பேச்சு மெதுவாய்
உன் காதுகளில் ......
சிறு போர்வையில்
இரு உயிர்கள் !!!!

# இது காதல் காலமடி ......

Thursday, 18 July 2013

என்னை என்ன செய்தாய் ..... என் கவிதை சு.மா.காயத்ரி


என்னை என்ன செய்தாய் .....
என் கவிதை சு.மா.காயத்ரி




என்னை என்ன செய்தாய்
நான் என்ன செய்கிறேன்
புரியாத புதிராய்
கணம் கணம்
இதம் இதம்......
உயிர் கோர்த்தாய்
எனக்குள்
உயிர் கொடுத்தேன்
என் எழுத்துக்கு .......
சுட்டு விரலாய் நீயும்
கட்டை விரலாய் நானும்
எழுதும் எழுத்துக்கள்
கவிதையாய் மாறி
காவியமாகும்....
நடு சாலையில்
கரம் சேர்த்தாய்
சிறு மழைச்சாரலில்
இதழ் சேர்த்தாய் மெதுவாக ....
சிறு பறவையாய் நான்
என் வானமாய் நீ
உன்னில் சிறகு விரிக்கிறேன்......

# என்னை என்ன செய்தாய் !!!!!

 

Tuesday, 9 July 2013

கல் விழுந்த கண்ணாடி மாளிகை....... என் கவிதை சு.மா.காயத்ரி



கல் விழுந்த கண்ணாடி மாளிகை
என் கவிதை சு.மா.காயத்ரி

 

 என்னவெல்லாம் நினைத்தேன்....
வாழ்வின் எல்லை தொட
விண்முட்டி மேக ஊர்வலம் செல்ல......
கனவென்னும் கனவுகள்
காற்றில் கரைந்துபோகும்
விந்தையென்ன......
சுகம் சுகம் என
சுகமளித்தவை எல்லாம்
சுகமாய் இல்லை
என்னோடு சேர்த்து......
என் கனவில் நீ நீ மட்டுமே
நானும் நீயாகி போனேன்
உன் கனவில் நான் மட்டும்
இல்லையென்ற போது
தீயாகி போனேன்.......
கடல் கொண்டுசென்ற
மண் வீடு போல
கணம் கணம் தவிக்கிறேன்.....
எல்லாம் தண்ணீரில் எழுதிய
கனவுகள்.....
இது
# கல் விழுந்த
கண்ணாடி மாளிகை