Thursday, 4 July 2013

சாதி சாதி .... என் உணர்வு சு.மா.காயத்ரி



சாதி சாதி ....
என் உணர்வு சு.மா.காயத்ரி


இனி ஒரு விதி செய்வோம் : வெல்வோம்

 
 சாதி சாதி என்று
எதையடா சாதித்தீர்கள்.....
சாதிகள் இல்லையடி பாப்பா
என்று முழங்கிய
என் பாரதியின் வார்த்தைகள்
மழுங்கிவிட்டதோ.....
சாதி = சாதல் : எத்தனை
எத்தனை உயிர்கள்
உன்னால் தீக்கிரையாகி
போகும் அவலமென்ன .......
சாதி ஒழிப்போம்
சாதி ஒழிப்போம்
என்று மேடை பேச்சுகளில்
பந்தாடப்படும் இவ்வார்த்தைகள்......
அனைவரும் சமம் சமம்
என்று கூறும் அரசாங்க
விண்ணப்பங்களில் வரிந்து
கொண்டு கேட்க்கப்படும்
ஜாதித் தகுதி.......
இன்று மாறும் இன்று மாறும்
என்று மாறும்.....
என்றும் அணையும் இந்த
தீ இது ஜாதிதீதீதீதீதீதீதீதீ........

# வெட்கி தலைதாழ்கிறேன்......



https://www.facebook.com/pages/என்-கவிதை-கவித்திரி-சு-மாகாயத்ரி/479521935406031?hc_location=timeline

1 comment: