Saturday, 29 December 2012

" என்னை புரியாதவர்களுக்கு என் புத்தாண்டு பரிசு "..... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி



" என்னை புரியாதவர்களுக்கு என் புத்தாண்டு பரிசு ".....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

நம்மை  புரியாதவர்களுக்கு
ஒரு போதும் நாம் புரிவதில்லை ......
நான் நான் என்ற நோக்குடன்
பார்பவர்களுக்கு
ஒரு போதும் நாம்  தெரிவதில்லை .....
மௌனமான சிலர்
பேசி பார்காத சிலர்
பேசாமலே இருப்பது நல்லது .....
எப்படி பேசுவது என்று தெரியாமல்
பேசி பேசி ......
நம்மை உணர்த்தி விடுகிறார்கள் .....
நாம் எங்கே உள்ளோம்
அவர்கள் நிலையில் ......
உலகம் ஒரு போதும் நீ நினைப்பது
போல இருப்பதில்லை ......
நீ நினைப்பது போல இருந்தால்
அது உன் உலகம் ....
என்னை புரிந்து கொண்டவர்கள் மட்டும்
எனக்கு போதும் ......
என்னை புரியதவர்களுக்கு
என்னை புரியவைக்க
எனக்கு நேரம் இல்லை ....







                        

Monday, 24 December 2012

நின்னை சரணடைந்தேன் ..... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி



நின்னை சரணடைந்தேன் .....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

......இது கவிதை மட்டுமே.....


 

 










திரி தூண்டிய அகல் போல ...
என்னை தீண்டியும்....
தூண்டியும்....
வெளிச்சமாக்கினாய் என்னோடு சேர்த்து
என் வாழ்வையும் !!!!!
கனவோடு நினைவுகள்
கனவுகளில் ....
நினைவுகளில் .......
கனவின் நிஜங்கள் நிழல்கள் !!!!!
ஒரு காவலனாய்
ஆவலோடு .....
காத்து கொண்டிருக்கிறாய்
காவல்- என் நினைவுகளை...
யாருக்கும் தெரியாமல்
ரகசியமாக ......
எனக்கானவை எல்லாம்
என்னால் தீர்மானிக்கபடுகிறது
முதன் முறையாக .....
உன் அனுமதியோடு !!!!!
பார்க்காத நேரங்களில் எல்லாம்
என் கண்களில் உனக்கான படங்கள்
என்னோடு !!!!!
என்னிடம் யாரும் சரணடையாத
நிலையில் .......
நான் மட்டும் நின்னை சரணடைந்தேன் .....







Friday, 21 December 2012

என் வலிகள் கொஞ்சம் தான் போல !!!!!! என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

என் வலிகள் கொஞ்சம் தான் போல !!!!!!

என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி



என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி

 
எனக்கு மட்டும் ஏன் இப்படி
என்று பலநாள் கலங்கி இருக்கிறேன் .....
எனக்கென்று யாருமில்லை என்று
மனசாட்சி இல்லாத
மனதும் நினைத்து கொள்கிறது .....
பல கதைகள் கேட்கும் போதும்
பார்க்கும் போதும்
எப்படி தான் தாங்குகிறர்களோ....
என்று மனது துடிக்கிறது ...
என்னடா வேலை இது
என்று எண்ணம் மேலோங்கிய போது ..
.....நடந்த நிகழ்ச்சி .....
இன்று காலை என் விடுதியில்
வேலை செய்யும் வயதான பாட்டி
என்னை அழைத்து
"எந்த நம்பர் -கு போன் போட்டுதாமா "
என்று கேட்ட போது
மறுக்கமுடியவில்லை .....
சரி என்று அழைத்து கொடுத்தேன் ...
ஒரு நிமிடம் கூட இருக்காது ...
பேசிட்டேன் மா என்று சொன்னபோது ...
அதற்குள்ளவா என்றேன்
ஆமா மா என்று சொல்லி விறு விறு என்று நடந்த போது......
என்னவென்று புரியவில்லை .....
பின் தான் தெரிந்தது
தாய்  கூட பேச அருமை மகனுக்கு விருப்பம் இல்லையாம் .....
என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை ...
உணவு உண்ணும் போது
மனதின் ரணம் ஆறவில்லை
இவர்களை எல்லாம் என்ன சொல்லி திட்டுவது ....

Thursday, 20 December 2012

இன்று கடைசி நாளாம்.....!!!! என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி



என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி
இன்று கடைசி நாளாம்.....
நேற்றில் இருந்து ஏதோ
நடந்துகொண்டுள்ளது .....
பார்பவர்கள் எல்லாம்
என்னென்னவோ
  சொல்கிறார்கள்.....
சேர்த்து வைத்ததை எல்லாம்
தர்மம் பண்ண சொல்கிறார்கள்....
ஆசைப்பட்டதை செய்யுங்கள் ..
என்று அறிவுரைகள் வேறு
 
நாளைக்கு கம்பெனி லீவ் உண்டா
என்று கேட்கும் போது
கொஞ்சம் பயமாய்தான் இருக்கிறது ....
ஒன்றரை
 நாள் விடுப்புடன் கூடிய
சம்பளம் ......
 ஹய்யோ
நான்
 இன்னும் லீவ் போடலியே.....
என்னடா வாழ்கை இது ...
லீவ் வும்
 போச்சு....
உலகம் அழிந்தால் உயிரும் போச்சு ....
இந்த மாசம் சம்பளம் ..?
கும்கி படம் கூட பாக்கலயே...!
நல்ல இருக்குன்னு நண்பன் சொன்ன ஞாபகம்...
ஊருக்கு போய் உயிர் விடலாம் என்றால்
டிக்கெட் இல்லையாம் ரயிலில் ...
கடன் கூட எவனும் தருவதில்லை.....
நாளைக்கு உலகம் அழிந்தால்
என்னடா பண்ணுவிங்க ..?
தர்மம் பண்ணுங்கள் என்று
நானும் சொல்லி கொண்டிருக்கிறேன்....
நாளைய முடிவு என்னவாகும் என்று
தெரியாமல் ....


Wednesday, 12 December 2012

முறைகள் இல்லாத விதிகள் !!!! என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

முறைகள் இல்லாத விதிகள்  !!!!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி

 
முறையாய் இல்லாத விதிகள்
முரண்பாடுகள் !!!! 

விதிமுறைகள் உருவாக்க படுகின்றது
பின்பற்றபடுவதில்லை.....
கடமைக்காகவும் நிர்பந்ததிர்காகவும்
கட்டாயபடுத்த படுகின்றோம்
விதிமுறைகளை பின்பற்ற...
விதியும் முறையும் இல்லாத
உலகத்தில்
பின்பற்றும் யாரும் முறையாய் வாழ்வதில்லை
வாழ விடுவதில்லை ....
சட்டங்களும் திட்டங்களும்
உனக்கு மட்டும் தான்
எனக்கு மட்டும் தான் என்ற
விவாதங்களுக்கு பஞ்சம் இல்லை....
விதியை ஒரு முறை மீறினால் அச்சம் 
பல முறை மீறினால் அது இன்பம் இன்பம்.....
விதியை மீறுவோருக்கு ......
விதி முறைகளை பின்பற்றுவோம்....
முறையாய் வாழ்வோம் ...
இனியொரு விதி செய்வோம் ...


Tuesday, 11 December 2012

எனக்காக நீ !!!!என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

எனக்காக நீ !!!!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


யாருக்காகவும் யாரும் நிற்பதில்லை
காலம் நேரம் உட்பட ...
வேகமாய் ஓடும் காலச்சக்கரம்
யாரையும்  இழுத்து  செல்வதில்லை
தன்னோடு ....
நிர்பந்தம் .......கட்டாயம்  என்னும் இரு சொற்கள்
பின்னோடு ஓடி கொண்டிருக்கிறோம் ....
மழை என்னும் துளிகள்
மண் மீது விழும் நேரம் ...
யாருக்காவும் யாரும் நிற்பதில்லை ....
விட்டால் போதும் என விடைபெறுகிறோம் ...
யாருக்காகவும் யாரும் பேசுவதில்லை ....
காரணங்களுக்காக மட்டும் கலந்து பேசுகிறோம் ....
எனக்காக யாரும் பேசுவதில்லை
மனிதர்களில் உன்னை தவிர ....
உனக்காக நான் பேசாத போதும்
எனக்காக நீ மட்டும்  பேசிக் கொண்டிருக்கிறாய்
என்னிடம் மட்டும் ......
என்னை பற்றிமட்டும் .......
எனக்காக மட்டும் .......
எனக்காக நீ .....
எனக்கான நீ ......