Tuesday, 5 February 2013

முடிவில்லா கடமைகள் .....பெண்மையின் உண்மைகள் !!!!!என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

முடிவில்லா கடமைகள் .....பெண்மையின் உண்மைகள் !!!!!

 
உயிர் கொடுத்து.....
கருத்தரித்து .....
கருவளர்ந்து.....
மரண வாசல் தொட்டு.....
என்னை உன்னில் இருந்து பிரித்தாய்
முதல் முறையாய்.....
உதிரத்தின் ஒரு பகுதியை
    -  எனக்கு உணவாக்கினாய் .....

உன் தோளில் தூங்கிய என்னை
தூரி இட்டாய் 
நானாக வளர்தேனோ இல்லையோ...
எனக்காக நீயும் வளர்ந்தாய்  என்னோடு.......

பள்ளி செல்லுகையில்.......
என் முதல் அழுகை
உன் முந்தானையில் கண் துடைத்து
தேற்றி தேற்றி என்னை பள்ளியில்
விட்டாய்
உன் சேலை வாசம்
தீர்வதற்குள்  நீ சென்று விட்டாய்
யாரயோ நம்பி என்னை விட்டுவிட்டு
பூபெய்தி புது உலகம் கண்ட போது ....
என்னை விட நீதான் அதிகம்
கரைந்திருப்பாய் பயத்தில்.....
என்னை யாராலும் புரிந்துகொள்ளமுடியவில்லை
உன்னை தவிர .....
நான்  கல்லூரி சென்ற போது
பூரிப்பில் உன் கண்கள் கரைந்த போது
என்னவோ செய்து விட்டாய் ........
எனக்கான வேலை கிடைத்த போது
அளவில்லா ஆனந்தம்
அடைந்தது நீ மட்டுமே.......
இனி எனக்கு யாரும் தேவை இல்லை
என் மகள் உண்டு என
உணர்ச்சி பொங்க பேசினாய் .....

எனக்கான ஒரு வாழ்கை அமைந்த போது கூட
உனக்கான கடமை இன்னும் ஓயவில்லை ......
நம் பிரிவுக்கான கண்ணீர் நான் உதிர்த்தபோது ......
நீயும் உருகித்தான் போனாய் .....
எனக்காக என் உயிர் வந்த போதும்
உனக்கான கடமை ஓயவில்லை .....
பெண்மை கடமை சார்ந்தது.....
இது பெண்மையின் உண்மை .....
பெண்மையை போற்றுவோம்.......
என் எழுத்து என் பேனா...
பெண்மையின் கடமைக்கு தலைவணங்குகிறது ....

1 comment: