Tuesday, 10 November 2015

என்னை தொலைத்த உலகம்.... என் கவிதை காயத்திரி

என்னை தொலைத்த உலகம்
என் கவிதை காயத்திரி 


கனல் நீராய் கரைந்தோடுது
இந்த நாட்கள்
கரைந்து கரைந்து விழியும் வற்றிவிட்டது...
அக்கம் பக்கம் எல்லோரும் இருந்தாலும்
என் பக்கம் யாரும் இல்லை...
யாரை இங்கு தொலைப்பது
என்னை எல்லோரும் தொலைத்துவிட்டபோது...
எல்லாம் கடந்து விட்டது
எங்கும் போகாமல்...
பாறையில் செய்த என் மனம்
இன்று மெழுகு போல் உருகித்தொலைகிறது....
எல்லோருக்குமான தொலைந்த கனவுகள்
விருப்பு வெறுப்புகள்
எல்லாம் இன்று என் மூலமாய்
வாழ்கிறார்கள்...
என்கனவுகளை சிதைத்துவிட்டு
புதைத்துவிட்டு மிதித்துவிட்டு நகர்கிறார்கள்
இந்த மனித மிருகங்கள்...
எனக்கான பாதையும் இதுவல்ல
இந்த பாதையின் பயணியும் நானல்ல...

Saturday, 22 August 2015

பெண்ணும் கல்வியும் என் கவிதை சு.மா.காயத்ரி

பெண்ணும் கல்வியும்
என் கவிதை சு.மா.காயத்ரி

 Educate Girls Logo Small.jpg
சார்ந்து சார்ந்து
சோர்ந்து போனவர்கள்
இந்த பெண் பாலினங்கள்....
தகப்பனை சார்ந்து
சகோதரர்களை சார்ந்து
கணவனை சார்ந்து
பின் பிள்ளையை சார்ந்து....
என் இந்த தயக்கம்...
வளர்ந்தால் ஒன்றும் வீழ்ந்து
விட மாட்டோம்...
வீழ்த்தியும் விட விட மாட்டோம்...
வீழவும் விடமாட்டோம்...
அறிவியல் வளர்ச்சியில்
தூரம் போகும் இந்த உலகம்...
பதினெட்டு ஆயிற்றா
மணவாளனை தேடுவதை
விட்டுவிட்டு...
நல்ல கல்லூரியை தேடுங்கள்...
ஆண் கல்வி நம் வீட்டுக்கு மட்டும் தான்....
பெண் கல்வி இந்த நாட்டிற்கு...
கல்வி எனும் மூன்றெழுத்து மந்திரம்
ஒரு மாயச்சொல்...
பெண்மையின் துணை !!!
தனி ஒருவனின் துணை சார்ந்து
நில்லாமல்...
இவளின் துணை சார்ந்து பலர் நிற்க
பெண் கல்வி அவசியம்...
மகளாகி
மனைவியாகி
தாயாகி
முடிவதில்லை இந்த வாழ்கை....
பட்டங்கள் வாங்கியும்
சட்டங்களை ஆண்டும்
முடியவேண்டும் இந்த பெண்களின் வாழ்கை....
பெண் கல்வி வீட்டிற்கு அல்ல
நாட்டிற்கு...
பெண்களை பேணுவோம்

கல்விக்கு குரல் கொடுப்போம்...  

Thursday, 13 August 2015

வீழ்வதற்கல்ல வாழ்கை .... என் கவிதை சு.மா.காயத்ரி

வீழ்வதற்கல்ல வாழ்கை ....
என் கவிதை சு.மா.காயத்ரி
























இது என்ன ஒரு முறை ஓடும்
பந்தையமா ?
வீழ்ந்தவுடன் தேங்கி நிற்பதற்கு...
இந்த வாழ்கை முழுவதும் உன்னை சுற்றிலும்
பந்தையங்கள்...
விழு
எழு ஓடு
ஓடிகொண்டே இரு...
எத்தனை முறை விழுந்தால் என்ன
இது உன் பந்தயம்
எழுந்து கொண்டே இரு...
எல்லா எழுச்சியும்
உன்னை சுற்றி பல இதயங்களை
எழுச்சியால் எழவைக்கிறது ....
இந்த பந்தயம் உனக்கும்
உன் முயற்சிக்கும் தான் ....
வீழ்ந்து விடாதே..

வென்று விடு !!!

Wednesday, 12 August 2015

இந்த பூக்களை மிதிக்காதீர்கள்.... என் கவிதை சு.மா.காயத்ரி

இந்த பூக்களை மிதிக்காதீர்கள்....
என் கவிதை சு.மா.காயத்ரி






















காதலிப்பவர்களுக்கு இந்த தோட்டத்தில்
அனுமதி இல்லை....#
இந்த பூக்கள் என்றோ மலர்ந்தது
இரு மனங்களில்..
இது விற்பனைக்கும்  அல்ல
இது பார்வைக்கும் அல்ல...
கண் கவர்ந்து வளர்ந்து செழித்து
நின்றது ஒரு காலத்தில்...
இன்றோ ஒற்றை மனதில் நீர் இன்றி
கண்ணீரால் மடிந்து நிற்கிறது...
இங்கு துளிர்க்கவும் வழியில்லை
மடிந்து விடவும் மனமில்லை...
தன்னந்தனியாக யாருமில்லா
வழியில் நிற்கிறது...
காதலில் மீண்டவர்கள் யாரேனும் இருந்தால்
கொஞ்சம் நீர் விட்டு செல்லுங்கள்...
மடிவது தற்கலிகமாகட்டும்
இந்த செடியின் மரணம்...
நீர் மட்டும் போதும் யாரின்

கண்ணீரும் செடியை சிதைத்துவிடும்....

Thursday, 6 August 2015

இனி இப்படித்தானோ... என் கவிதை சு.மா.காயத்ரி

இனி இப்படித்தானோ...
என் கவிதை சு.மா.காயத்ரி 











நீயும் நானென என் கனவுகள்

ஏனோ காணல் நீராய் போனது...
என்னை மீட்டுக்க எல்லாம்
செய்து விட்டேன்...
கூகுளுக்கும் வழியும்
என் வலியும் தெரியவில்லை...
அந்த நினைவுகளை என்ன செய்வது...
புத்தகமா கிழித்து செல்ல
இல்லை ..
திரைப்படமா அழித்து செல்ல
என் மனமாயிற்றே என்ன செய்வது...
அழிக்கவும் தெரியவில்லை 

அழியவும் மனமில்லை...

Saturday, 27 June 2015

மனதில் நின்ற சுவை - நானும் உணவும் - 1 என் கவிதை சு.மா.காயத்ரி

அன்பார்ந்த என் கவிதை வாசகர்களுக்கு : மனித வாழ்வில் நீங்காது இடம் பிடித்த உணவு, என் வாழ்வில் நான் தொலைத்த சுவை பற்றிய குறிப்புகள் , இனி பக்கம் பக்கமாய்

இன்று மாதம் ஆறு லகரத்தில் என் சம்பளம் இருந்தாலும் 
உலகின் மிக சிறந்த நகரத்தில் வாழ்ந்தாலும் 
மின்னி ஒளி மிளிரும் தலை சிறந்த உணவகத்தில் உணவுன்டாலும் 
இந்த சுவையை என்னால் பெற முடியவில்லை ...
# நான் தொலைத்த சுவை 


மனதில் நின்ற சுவை - நானும் உணவும் - 1
என் கவிதை சு.மா.காயத்ரி 



Picture Courtesy :http://cookclickndevour.com

கூடு விட்டு கூடுபாய்வது போல 
இங்கு கண்டம் விட்டு 
கண்டத்தில் வாழ்கிறேன் ....
சில சுவை நாவில் நிற்கிறது ...
சில சுவை மனதில் நிற்கிறது ...
சில சுவை என் நினைவில் 
நீங்காது நிற்கிறது ....
இன்று விழிக்கையில் 
என் மனம் என்னை 
என் வாழ்வின் பின்னோக்கி 
இழுத்துசென்றது ....
என் வாழ்வில் தனி இடங்களை பிடித்த 
சுவை சுவை ...
நான் ஒன்றும் மின்னி ஒளிரும் 
நகரத்தில் பிறக்கவில்லை 
காவிரி தலைவிரித்து ஓடும் கரையில் உள்ள 
சிறு கிராமத்தில் பிறந்தவள் ...
மழை வந்தால் மின்சாரம் இருக்காது ...
சாரல் அடித்து வாசல் முழுவதும்
காவிரியின் கிளை ஓடும்...
அந்த இரவுகளில் எங்கள் வீட்டில் 
எப்போதும் இருக்கும்
அரிசியும் பருப்பும் சாதம் ....
சிறு விளக்கொளியில் கொட்டும் மழையில் 
சுட சுட தட்டில் போட்டு
நன்கு காய்ச்சிய நெய்விட்டவுடன்...
மண்ணின் வசமும் , அந்த சோற்றின் சுவையும் .... 
இருட்டில் எங்கு என்ன என்று தெரியாமல் 
வருமே ஒரு மனம் சுவை திடம்...
தெய்வீகம்...வெளிச்சம் எதற்கு 
அதன் மனமே கையை இழுத்து செல்லும்
தேவமிர்ததுக்கு...
காலம் மாறிவிட்டது 
மனித கலாச்சாரங்களும் தான்.... 
இப்பொழுது மழைவந்தால் சுவடு கூட 
தெரியாமல் மறைந்து விடுகிறது...
கான்க்ரெட் தரைகளில்...
அந்த மழைச்சோறு  தொலைத்து 
இரண்டு நிமிட மாகிக்கு மாறிவிட்டது 
என் கிராமம் !!!! 

Wednesday, 27 May 2015

என் நீண்ட பயணம் ... என் கவிதை சு.மா.காயத்ரி

என் நீண்ட பயணம் ...
என் கவிதை சு.மா.காயத்ரி 



காரிருள் கானகத்தில் 
வழி மறந்த பறவையாய் 
வாழ்கை என்னும் முள்கூண்டினுள் 
சிக்கி தொலைகிறேன் ....
தனிமையில் !!!
எல்லா திசைகளிலும் என்னை 
என்னை தன்னுடன் இழுத்து செல்கின்றது 
எந்த பாழாய் போன வாழ்கை ....
எப்பொழுது விடியும் 
இந்த வாழ்கை முடியும்...
கால் தூரம் கூட கடக்கவில்லை 
எனக்கேன் இந்த வெறுப்பு...
தொடங்கி முடிந்து விட்டால் 
எனக்கு  நிம்மதி 
தொடங்காமலே முடிந்து விட்டால் 
பெரு  நிம்மதி  இங்கு பலருக்கு...
எல்லாம் மாறும் மாறும் என 
வாழ்க்கையின் திசையே இங்கு மாறிவிட்டது ....
என்னால் யாருக்கும் எதுவும் தரமுடியவில்லை 
என் நீண்ட பயணம் பலருக்கு 
நிம்மதியை நிச்சயம் தரும்.....
வரும்போது என்னிடம் ஒன்றும் இல்லை 
இந்த பயணம் போகும் போது 
தொலைந்த வாழ்க்கையும் 
சில தருணங்களையும் கொண்டு செல்கிறேன்
யாருக்கும் தெரியாமல் ....
எந்த துணையுமில்லாமல்....
என்ன எழுதுவது என்று தெரியாமல் 
நீண்ட நேரம் சுவாசித்து 
யோசித்து  நிற்கிறேன்....
இது என் கடைசி கவிதையானாலும் 
அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை !!!
இது தான் என்  வாழ்கை 
இதில் வாழ எனக்கு  ஒன்றுமேயில்லை...

Monday, 18 May 2015

எல்லாம் கடந்து போகும் எப்போது ... என் கவிதை சு.மா.காயத்ரி

எல்லாம் கடந்து போகும் எப்போது ...என் கவிதை சு.மா.காயத்ரி 



நதியினுடே செல்லும் சருகைப்போல மனம் போன போக்கிலே வளைந்து நெளிந்து சுவடு தெரியாமல் மிதந்து கொண்டிருக்கிறேன் ....வாழ்வின் கால் வயது கூட தீரவில்லை ஏனோ வாழ்ந்து சலித்த உணர்வு ....எனக்கென எனக்கென நினைத்தவர்கள் எல்லாம் இன்று தனக்கென தனக்கென மாறிவிட்டார்கள் ....எல்லாம் கடந்து போகும் கடந்து போகும் என நானே வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை கடந்து விட்டேன் இனி கடந்து செல்ல ஒன்றும் இல்லாமல் ....

Monday, 9 February 2015

இரவின் மடியில்........ என் கவிதை சு .மா .காயத்ரி

 இரவின் மடியில் 
என் கவிதை சு .மா .காயத்ரி 


 That Festival night by BoxTail


கருநீல வானமும் 
மின்னும் சின்னஞ்சிறு
 விண்மீன் கூட்டமும் 
தேய்ந்து கொண்டிருக்கும்
 ஒற்றை நிலவும் .....
தூர குரைக்கும் நடுநிசி நாயும்..
என்னை எங்கோ கொண்டு  செல்கின்றன ....
தொலைதூரமாய் 
எல்லைகள் எதுவுமின்றி .....
மனமில்லாமல் நானும் தொலைந்து கொண்டிருக்கிறேன் 
தன்நத் தனிமையில் 
இரவின் மடியில் 


# இவள் 


Tuesday, 13 January 2015

என்ன இது..... என் கவிதை - காயத்திரி....

என்ன இது.....
என் கவிதை - காயத்திரி....


 
விழி மூடி உறக்கம் தழுவ மறுக்கிறது 
மணி நேர திரைப்படமாய் 
மனதில் புது புது நினைவுகள்....
சுழன்று சுழன்று 
எப்போது உறங்கினேன் என்று தெரியாமல் 
பல மணிநேரமாய் உறங்கினேன்....
மணியடித்தும் கண்டுகொள்ளாமல் !!!!
யாரையும் எதிர்கொள்ளும் 
தைரியம் நேற்றோடு மறைந்துவிட்டது....
எதையும்  தாங்கும் இதயம் 
இதோ  துளிர்விடுகிறது  இப்போது !!!!
உலகிலயே மிக பாதுகாப்பான இடம் 
இரண்டு தான் 
என்னை தழுவும் என் போர்வையும்...
என்னை அன்பால் நனைக்கும் குளியலறையும்.....
எவ்வளவு  நேரம் நனைந்தேன் என்று தெரியவில்லை
நனைந்து கொண்டிருக்கிறேன் 
நேரம் கடந்தும் 
நீரிலும் கண்ணீரிலும்....
புள்ளியால் முற்று பெறுமோ 
இல்லை முடிவில்லாமல் தொடருமோ 
என் சகாப்தம்...

விடை கண்ட புதிர்.....என் கவிதை சு.மா.காயத்ரி

விடை கண்ட புதிர்.....





என்ன சொல்வது 
எதெல்லாம் சொல்வது 
தொடங்கிய கதையெல்லாம் 
முடிவுக்கு தானே வரவேண்டும் 
இது முடிவில்லா தொடர்கதையோ....
விடையில்லா  புதிரோ 
தொடங்கிய நானே முடிக்க எனக்கு 
அனுமதியுமில்லை விருப்பமுமில்லை...
எல்லாம் கடந்து போகும் ...
ஆனால் எப்போது  ?
இன்று நாளை 
நாளை மறுநாள் 
மறுநாள்....முடிவில்லாமல் 
தொடர்ந்து தொடர்ந்து 
தொடருகிறது...இந்த புதிர் 
என்னிடம் விடையுண்டு  என அறியாமல்....

முடிவு தொடரும் .......