Monday, 26 August 2019

இது போர்வை காதல்!!!! என்கவிதை சு.மா.காயத்ரி

இது போர்வை காதல்
என்கவிதை சு.மா.காயத்ரி



காலை முதலே அலுத்து கிடந்த 
இந்த மனதிற்கும் உடலுக்குமான 
சிறு இடைவேளை 
ஆதவன் மங்கி மங்கி 
தான் கூடு திரும்பும் நேரம் 
காலை முதல் 
பளீரென்று பல்லிளித்து காட்டிய 
இந்த வானம் 
என்னை போலவே கரும் போர்வை 
போர்த்தி எட்டிப்பார்த்தது 
எங்கோ எவனோ 
தின்று வீசிய உருளை சீவளின் 
காகிதம் என்முன்னே 
பறந்து சென்றது காற்றில்...
மெல்ல வீசிய
மண்வாசத்தினூடே 
மிதந்து வந்தது 
சிற்சிறு மழை துளிகளும் 
போர்வையில் ஒளிந்து கொள்ளவா 
இல்லை 
எழுந்து செல்லவா ?
எந்த புடவை வாங்குவது என்ற 
குழப்பத்தை விட 
பெருங்குழப்பம் இது ! 
சட சடவென்று பெய்த 
மழை துளியின் 
சப்தமும் 
நேற்று காயவைத்த 
துணியின் நியாபகமும் 
ஐயோ !
சட்டென்று எழுந்தேய் ஓடினேன் 
போர்வையினூடே..

Saturday, 13 July 2019

ஏனோ ? என் கவிதை சு.மா.காயத்ரி

ஏனோ ?




எழுத்துக்களே  உதிக்காத
நாட்கள் கடந்து
ஏனோ  எழுதியாவது
கடந்துவிடு
என்கிறது என் மனது...
வார்த்தைக்கு வார்த்தை
யோசித்து யோசித்து
எழுதாது போன
நாட்களும் உண்டு
நிற்காத அருவியாய்
கொட்டிக்கொண்டு
விழும் நாட்கள்
இன்று..
என்ன எழுதுவது
என்று எழுதாத
கவிதைகள் பல
எதையாவது எழுதிக்கொண்டிரு
என எழுதும்
கவிதைகள் சில
.
.
.
.
.
ஏனோ ?

இப்படியும் சில மனிதர்கள்.......!! என் கவிதை சு.மா.காயத்ரி

இப்படியும் சில மனிதர்கள்!!!!





அமிலம்தான் தெளித்து விட்டேன்
ஏனோ ! நீயும்
அமைதியாக கடந்துவிட்டாய்
மருந்திடத்தான் நினைக்கிறன்
வடுவேய் மறைந்த பின்பு
சிரித்துக்கொண்டே
கடக்கிறாய்
வடுவின் வலி தெரிந்த போதும்..
காயம்பட்ட வடுகூட
மறைந்து விட்டது
ஏன் காயமாக்கினேன்
என்ற வலி மட்டும்
அகலவில்லை
என் மனதை விட்டு!!!

ஒரு போர்வை இரு தூக்கம் !!! என் கவிதை சு.மா.காயத்ரி

ஒரு போர்வை இரு தூக்கம் !!!!


விடிந்தாலும் விடியாத
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்.
நீயும் நானுமாய்
விழித்து பார்க்க எங்கும்
எந்தன் விழிகள்
லைத்திருக்க வேண்டுகிறது
எந்தன் மனம்
விழித்திருக்கையில்
போர்வை பகிர்வை
விரும்பும் நாம்
ஆழ்த்த உறக்கத்தில்
எனோ அவரவர்
பக்கம் இழுக்கின்றோம்
இரு வேறு கனவுலகத்தில்
செல்கின்றோம் என நினைத்து
ஒரு கனவுலகத்திற்கு
பயணிக்கிறோம்
ஒரு மனம் கொண்ட
பயணியாய்
.
.
.
.
#பயணிப்போம்

Tuesday, 6 September 2016

என்னதான் தருவேன் உனக்கு...!!! என் கவிதை சு.மா.காயத்ரி

என்னதான் தருவேன் உனக்கு
என் கவிதை சு.மா.காயத்ரி


என்னதான் தருவது உனக்கு
என்னை தவிர..
நீயும் நானுமாய் கழிந்த
காலை பொழுதுகள்
இப்பொழுதெல்லாம் நாமாகவே
விடிகின்றது...
என் தோள்கள் துவண்ட
வாடிய பொழுதும்
என்னையே வென்று விட்டாய்
என் தோழனாய் ...
என் தந்தையை போன்று
யாருமில்லை என்று மார்தட்டிய
நேரங்களில்
எனக்கான ஆபத்தில்
எனக்கான  பாதுகாப்பில்
என் தந்தையாகிப்  போனாய்  ...
என் தாயின் நினைப்பில் துவண்ட
வாடிய நேரங்களிலும்
என் மனம் தளர்ந்த காலங்களிலும் 
தாயுமானவனாய் நின்றாய்..
சில தருணங்களில்
சிறு குழந்தை போல உந்தன் பேச்சும்
மழலையின் மனம் மாற
அந்த சிரிப்பும்...
என்றும் என் இதயத்தின்
பொக்கிஷங்கள்...
சிறு சமயங்களில் நான் வெடித்து அழ
அந்த அணைப்புகள் உணர்த்தியது
என் பாதுகாப்பை..
அந்த ஸ்பரிசம்
எனக்குள் சொன்னது
மீண்டும் எப்பொழுது அழலாம் என்று...
ஒவ்வொரு காலையும்
உன் ஆழ்ந்த துயிலில்
உன்னை ரகசியமாய்
காதலித்து கொண்டிருக்கிறேன்
உனக்கே தெரியாமல்...
இதுதான் வாழ்க்கையா என்ற பொழுது
இதுவல்ல இதுவும் தான் 
வாழ்கை என்று !!!
வசந்தங்களை காட்டினாய்
உன் மனைவி என்பதை தவிர
நான் என்றுமே உன் ரசிகை...
யாருக்காகவும் எழுதாத என் பேணா
என்று உனக்காக எனக்காக
நிற்காமல்  எழுதிக்கொண்டே இருக்கிறது
பெருமையாக சிறு கர்வத்தோடு...
எல்லா ஆண்களும்  இப்படியா
என் தெரியாது ஆனால்
எனக்கான ஆண்மகன் நீதான்
என்றுமே நீதான்...
வேண்டும் வேண்டும் என்ற பெண்களே
நேசியுங்கள் ரகசியமாய் ரசியுங்கள்

உங்கள் ஆண்களை...

Tuesday, 10 November 2015

என்னை தொலைத்த உலகம்.... என் கவிதை காயத்திரி

என்னை தொலைத்த உலகம்
என் கவிதை காயத்திரி 


கனல் நீராய் கரைந்தோடுது
இந்த நாட்கள்
கரைந்து கரைந்து விழியும் வற்றிவிட்டது...
அக்கம் பக்கம் எல்லோரும் இருந்தாலும்
என் பக்கம் யாரும் இல்லை...
யாரை இங்கு தொலைப்பது
என்னை எல்லோரும் தொலைத்துவிட்டபோது...
எல்லாம் கடந்து விட்டது
எங்கும் போகாமல்...
பாறையில் செய்த என் மனம்
இன்று மெழுகு போல் உருகித்தொலைகிறது....
எல்லோருக்குமான தொலைந்த கனவுகள்
விருப்பு வெறுப்புகள்
எல்லாம் இன்று என் மூலமாய்
வாழ்கிறார்கள்...
என்கனவுகளை சிதைத்துவிட்டு
புதைத்துவிட்டு மிதித்துவிட்டு நகர்கிறார்கள்
இந்த மனித மிருகங்கள்...
எனக்கான பாதையும் இதுவல்ல
இந்த பாதையின் பயணியும் நானல்ல...

Saturday, 22 August 2015

பெண்ணும் கல்வியும் என் கவிதை சு.மா.காயத்ரி

பெண்ணும் கல்வியும்
என் கவிதை சு.மா.காயத்ரி

 Educate Girls Logo Small.jpg
சார்ந்து சார்ந்து
சோர்ந்து போனவர்கள்
இந்த பெண் பாலினங்கள்....
தகப்பனை சார்ந்து
சகோதரர்களை சார்ந்து
கணவனை சார்ந்து
பின் பிள்ளையை சார்ந்து....
என் இந்த தயக்கம்...
வளர்ந்தால் ஒன்றும் வீழ்ந்து
விட மாட்டோம்...
வீழ்த்தியும் விட விட மாட்டோம்...
வீழவும் விடமாட்டோம்...
அறிவியல் வளர்ச்சியில்
தூரம் போகும் இந்த உலகம்...
பதினெட்டு ஆயிற்றா
மணவாளனை தேடுவதை
விட்டுவிட்டு...
நல்ல கல்லூரியை தேடுங்கள்...
ஆண் கல்வி நம் வீட்டுக்கு மட்டும் தான்....
பெண் கல்வி இந்த நாட்டிற்கு...
கல்வி எனும் மூன்றெழுத்து மந்திரம்
ஒரு மாயச்சொல்...
பெண்மையின் துணை !!!
தனி ஒருவனின் துணை சார்ந்து
நில்லாமல்...
இவளின் துணை சார்ந்து பலர் நிற்க
பெண் கல்வி அவசியம்...
மகளாகி
மனைவியாகி
தாயாகி
முடிவதில்லை இந்த வாழ்கை....
பட்டங்கள் வாங்கியும்
சட்டங்களை ஆண்டும்
முடியவேண்டும் இந்த பெண்களின் வாழ்கை....
பெண் கல்வி வீட்டிற்கு அல்ல
நாட்டிற்கு...
பெண்களை பேணுவோம்

கல்விக்கு குரல் கொடுப்போம்...  

Thursday, 13 August 2015

வீழ்வதற்கல்ல வாழ்கை .... என் கவிதை சு.மா.காயத்ரி

வீழ்வதற்கல்ல வாழ்கை ....
என் கவிதை சு.மா.காயத்ரி
























இது என்ன ஒரு முறை ஓடும்
பந்தையமா ?
வீழ்ந்தவுடன் தேங்கி நிற்பதற்கு...
இந்த வாழ்கை முழுவதும் உன்னை சுற்றிலும்
பந்தையங்கள்...
விழு
எழு ஓடு
ஓடிகொண்டே இரு...
எத்தனை முறை விழுந்தால் என்ன
இது உன் பந்தயம்
எழுந்து கொண்டே இரு...
எல்லா எழுச்சியும்
உன்னை சுற்றி பல இதயங்களை
எழுச்சியால் எழவைக்கிறது ....
இந்த பந்தயம் உனக்கும்
உன் முயற்சிக்கும் தான் ....
வீழ்ந்து விடாதே..

வென்று விடு !!!

Wednesday, 12 August 2015

இந்த பூக்களை மிதிக்காதீர்கள்.... என் கவிதை சு.மா.காயத்ரி

இந்த பூக்களை மிதிக்காதீர்கள்....
என் கவிதை சு.மா.காயத்ரி






















காதலிப்பவர்களுக்கு இந்த தோட்டத்தில்
அனுமதி இல்லை....#
இந்த பூக்கள் என்றோ மலர்ந்தது
இரு மனங்களில்..
இது விற்பனைக்கும்  அல்ல
இது பார்வைக்கும் அல்ல...
கண் கவர்ந்து வளர்ந்து செழித்து
நின்றது ஒரு காலத்தில்...
இன்றோ ஒற்றை மனதில் நீர் இன்றி
கண்ணீரால் மடிந்து நிற்கிறது...
இங்கு துளிர்க்கவும் வழியில்லை
மடிந்து விடவும் மனமில்லை...
தன்னந்தனியாக யாருமில்லா
வழியில் நிற்கிறது...
காதலில் மீண்டவர்கள் யாரேனும் இருந்தால்
கொஞ்சம் நீர் விட்டு செல்லுங்கள்...
மடிவது தற்கலிகமாகட்டும்
இந்த செடியின் மரணம்...
நீர் மட்டும் போதும் யாரின்

கண்ணீரும் செடியை சிதைத்துவிடும்....

Thursday, 6 August 2015

இனி இப்படித்தானோ... என் கவிதை சு.மா.காயத்ரி

இனி இப்படித்தானோ...
என் கவிதை சு.மா.காயத்ரி 











நீயும் நானென என் கனவுகள்

ஏனோ காணல் நீராய் போனது...
என்னை மீட்டுக்க எல்லாம்
செய்து விட்டேன்...
கூகுளுக்கும் வழியும்
என் வலியும் தெரியவில்லை...
அந்த நினைவுகளை என்ன செய்வது...
புத்தகமா கிழித்து செல்ல
இல்லை ..
திரைப்படமா அழித்து செல்ல
என் மனமாயிற்றே என்ன செய்வது...
அழிக்கவும் தெரியவில்லை 

அழியவும் மனமில்லை...

Saturday, 27 June 2015

மனதில் நின்ற சுவை - நானும் உணவும் - 1 என் கவிதை சு.மா.காயத்ரி

அன்பார்ந்த என் கவிதை வாசகர்களுக்கு : மனித வாழ்வில் நீங்காது இடம் பிடித்த உணவு, என் வாழ்வில் நான் தொலைத்த சுவை பற்றிய குறிப்புகள் , இனி பக்கம் பக்கமாய்

இன்று மாதம் ஆறு லகரத்தில் என் சம்பளம் இருந்தாலும் 
உலகின் மிக சிறந்த நகரத்தில் வாழ்ந்தாலும் 
மின்னி ஒளி மிளிரும் தலை சிறந்த உணவகத்தில் உணவுன்டாலும் 
இந்த சுவையை என்னால் பெற முடியவில்லை ...
# நான் தொலைத்த சுவை 


மனதில் நின்ற சுவை - நானும் உணவும் - 1
என் கவிதை சு.மா.காயத்ரி 



Picture Courtesy :http://cookclickndevour.com

கூடு விட்டு கூடுபாய்வது போல 
இங்கு கண்டம் விட்டு 
கண்டத்தில் வாழ்கிறேன் ....
சில சுவை நாவில் நிற்கிறது ...
சில சுவை மனதில் நிற்கிறது ...
சில சுவை என் நினைவில் 
நீங்காது நிற்கிறது ....
இன்று விழிக்கையில் 
என் மனம் என்னை 
என் வாழ்வின் பின்னோக்கி 
இழுத்துசென்றது ....
என் வாழ்வில் தனி இடங்களை பிடித்த 
சுவை சுவை ...
நான் ஒன்றும் மின்னி ஒளிரும் 
நகரத்தில் பிறக்கவில்லை 
காவிரி தலைவிரித்து ஓடும் கரையில் உள்ள 
சிறு கிராமத்தில் பிறந்தவள் ...
மழை வந்தால் மின்சாரம் இருக்காது ...
சாரல் அடித்து வாசல் முழுவதும்
காவிரியின் கிளை ஓடும்...
அந்த இரவுகளில் எங்கள் வீட்டில் 
எப்போதும் இருக்கும்
அரிசியும் பருப்பும் சாதம் ....
சிறு விளக்கொளியில் கொட்டும் மழையில் 
சுட சுட தட்டில் போட்டு
நன்கு காய்ச்சிய நெய்விட்டவுடன்...
மண்ணின் வசமும் , அந்த சோற்றின் சுவையும் .... 
இருட்டில் எங்கு என்ன என்று தெரியாமல் 
வருமே ஒரு மனம் சுவை திடம்...
தெய்வீகம்...வெளிச்சம் எதற்கு 
அதன் மனமே கையை இழுத்து செல்லும்
தேவமிர்ததுக்கு...
காலம் மாறிவிட்டது 
மனித கலாச்சாரங்களும் தான்.... 
இப்பொழுது மழைவந்தால் சுவடு கூட 
தெரியாமல் மறைந்து விடுகிறது...
கான்க்ரெட் தரைகளில்...
அந்த மழைச்சோறு  தொலைத்து 
இரண்டு நிமிட மாகிக்கு மாறிவிட்டது 
என் கிராமம் !!!! 

Wednesday, 27 May 2015

என் நீண்ட பயணம் ... என் கவிதை சு.மா.காயத்ரி

என் நீண்ட பயணம் ...
என் கவிதை சு.மா.காயத்ரி 



காரிருள் கானகத்தில் 
வழி மறந்த பறவையாய் 
வாழ்கை என்னும் முள்கூண்டினுள் 
சிக்கி தொலைகிறேன் ....
தனிமையில் !!!
எல்லா திசைகளிலும் என்னை 
என்னை தன்னுடன் இழுத்து செல்கின்றது 
எந்த பாழாய் போன வாழ்கை ....
எப்பொழுது விடியும் 
இந்த வாழ்கை முடியும்...
கால் தூரம் கூட கடக்கவில்லை 
எனக்கேன் இந்த வெறுப்பு...
தொடங்கி முடிந்து விட்டால் 
எனக்கு  நிம்மதி 
தொடங்காமலே முடிந்து விட்டால் 
பெரு  நிம்மதி  இங்கு பலருக்கு...
எல்லாம் மாறும் மாறும் என 
வாழ்க்கையின் திசையே இங்கு மாறிவிட்டது ....
என்னால் யாருக்கும் எதுவும் தரமுடியவில்லை 
என் நீண்ட பயணம் பலருக்கு 
நிம்மதியை நிச்சயம் தரும்.....
வரும்போது என்னிடம் ஒன்றும் இல்லை 
இந்த பயணம் போகும் போது 
தொலைந்த வாழ்க்கையும் 
சில தருணங்களையும் கொண்டு செல்கிறேன்
யாருக்கும் தெரியாமல் ....
எந்த துணையுமில்லாமல்....
என்ன எழுதுவது என்று தெரியாமல் 
நீண்ட நேரம் சுவாசித்து 
யோசித்து  நிற்கிறேன்....
இது என் கடைசி கவிதையானாலும் 
அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை !!!
இது தான் என்  வாழ்கை 
இதில் வாழ எனக்கு  ஒன்றுமேயில்லை...

Monday, 18 May 2015

எல்லாம் கடந்து போகும் எப்போது ... என் கவிதை சு.மா.காயத்ரி

எல்லாம் கடந்து போகும் எப்போது ...என் கவிதை சு.மா.காயத்ரி 



நதியினுடே செல்லும் சருகைப்போல மனம் போன போக்கிலே வளைந்து நெளிந்து சுவடு தெரியாமல் மிதந்து கொண்டிருக்கிறேன் ....வாழ்வின் கால் வயது கூட தீரவில்லை ஏனோ வாழ்ந்து சலித்த உணர்வு ....எனக்கென எனக்கென நினைத்தவர்கள் எல்லாம் இன்று தனக்கென தனக்கென மாறிவிட்டார்கள் ....எல்லாம் கடந்து போகும் கடந்து போகும் என நானே வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை கடந்து விட்டேன் இனி கடந்து செல்ல ஒன்றும் இல்லாமல் ....

Monday, 9 February 2015

இரவின் மடியில்........ என் கவிதை சு .மா .காயத்ரி

 இரவின் மடியில் 
என் கவிதை சு .மா .காயத்ரி 


 That Festival night by BoxTail


கருநீல வானமும் 
மின்னும் சின்னஞ்சிறு
 விண்மீன் கூட்டமும் 
தேய்ந்து கொண்டிருக்கும்
 ஒற்றை நிலவும் .....
தூர குரைக்கும் நடுநிசி நாயும்..
என்னை எங்கோ கொண்டு  செல்கின்றன ....
தொலைதூரமாய் 
எல்லைகள் எதுவுமின்றி .....
மனமில்லாமல் நானும் தொலைந்து கொண்டிருக்கிறேன் 
தன்நத் தனிமையில் 
இரவின் மடியில் 


# இவள் 


Tuesday, 13 January 2015

என்ன இது..... என் கவிதை - காயத்திரி....

என்ன இது.....
என் கவிதை - காயத்திரி....


 
விழி மூடி உறக்கம் தழுவ மறுக்கிறது 
மணி நேர திரைப்படமாய் 
மனதில் புது புது நினைவுகள்....
சுழன்று சுழன்று 
எப்போது உறங்கினேன் என்று தெரியாமல் 
பல மணிநேரமாய் உறங்கினேன்....
மணியடித்தும் கண்டுகொள்ளாமல் !!!!
யாரையும் எதிர்கொள்ளும் 
தைரியம் நேற்றோடு மறைந்துவிட்டது....
எதையும்  தாங்கும் இதயம் 
இதோ  துளிர்விடுகிறது  இப்போது !!!!
உலகிலயே மிக பாதுகாப்பான இடம் 
இரண்டு தான் 
என்னை தழுவும் என் போர்வையும்...
என்னை அன்பால் நனைக்கும் குளியலறையும்.....
எவ்வளவு  நேரம் நனைந்தேன் என்று தெரியவில்லை
நனைந்து கொண்டிருக்கிறேன் 
நேரம் கடந்தும் 
நீரிலும் கண்ணீரிலும்....
புள்ளியால் முற்று பெறுமோ 
இல்லை முடிவில்லாமல் தொடருமோ 
என் சகாப்தம்...

விடை கண்ட புதிர்.....என் கவிதை சு.மா.காயத்ரி

விடை கண்ட புதிர்.....





என்ன சொல்வது 
எதெல்லாம் சொல்வது 
தொடங்கிய கதையெல்லாம் 
முடிவுக்கு தானே வரவேண்டும் 
இது முடிவில்லா தொடர்கதையோ....
விடையில்லா  புதிரோ 
தொடங்கிய நானே முடிக்க எனக்கு 
அனுமதியுமில்லை விருப்பமுமில்லை...
எல்லாம் கடந்து போகும் ...
ஆனால் எப்போது  ?
இன்று நாளை 
நாளை மறுநாள் 
மறுநாள்....முடிவில்லாமல் 
தொடர்ந்து தொடர்ந்து 
தொடருகிறது...இந்த புதிர் 
என்னிடம் விடையுண்டு  என அறியாமல்....

முடிவு தொடரும் .......

Wednesday, 8 January 2014

விடையில்லா கேள்விகள்...... என் கவிதை சு.மா.காயத்ரி

விடையில்லா கேள்விகள்
என் கவிதை சு.மா.காயத்ரி




                                                                                   






சில கணங்கள் பேசும் 
மௌன மொழிகள்....

உனக்கும் எனக்குமாய்
என்னுள் சிக்கி தவிக்கும்
வார்த்தை மொழிகள்
வார்த்தை இல்லா அகராதி....
தேடி தேடி தொலையும்
மதி இல்லாத நிம்மதி...
தினம் ரசித்த காட்சிகள்
எல்லாம் இன்று 
மனம் வெறுத்த நிகழ்வுகள்...
தவறவிட்ட மனித்துளியாய்
மீண்டும் கிடைக்காதவை
இவை விடை இல்லா கேள்விகள்.....


                                                              # இவள்

Monday, 30 December 2013

யாரோ இவன் - கனவுப்புரவி மனிதன்...... என் கவிதை சு.மா.காயத்ரி


யாரோ இவன் - கனவுப்புரவி மனிதன்
என் கவிதை சு.மா.காயத்ரி











காரிருள் கானகத்தில்
தனிமையில் உதித்து
கனவுவென்ணும் புரவியில்
வலம் வந்தவன்...
ஜன்னலோர படுக்கையில்
கண்விழித்து பார்கையில்
என்னை கடந்து சென்றவன்....
மேகமென்னும் வாகனத்தில்
உருமாறி உருவம் மாறி
என்னை ஈர்த்தவன்
மழைகாற்றில் உதித்து
மண்ணின் வாசமாய்
காற்றில் வந்தவன்
தனிமையில் உழன்று உழன்று
நகர்ந்த நாட்களில்
அவனென்னும் கவிதைகளில்
என்னை தொலைத்தவள்
என்னில் பதியாத 
- அவன் முகமும்
எண்னில் உயிராடும் 
- அவனின் நினைவுகளும்
என் கண்ணீர் விதைகளில்
 - கவிதையாய் 
 முளைத்து வாழ்கின்றவன்