Saturday, 29 September 2012

பிரசுரிக்கபடாத சுவர் மொழி கதைகள் !!!!என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

பிரசுரிக்கபடாத சுவர் மொழி கதைகள் !!!!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


சுவர்மொழி கதைகள் ஒருபோதும் பிரசுரிகப்படுவதில்லை
மொழியின் ஆழம் எப்பொழுதும்
எப்பொழுதும் வலியின் நீளம்
மனிதர்கள் மாற மாற
கதைகளும் மாறிவிடுகிறது !!!!
புத்தகமான சுவர்கள்
மையாகிய கண்ணீர்கள் !!!
ஒவ்வொரு கதைக்கும் அவரவரே ஆசிரியர்கள் ....
கதைக்களம் எப்பொழுதும் அதேதான் !!
சுவர்களே பார்வையாளர்கள்
ஒருபோதும் மாறுவதில்லை !!!!
எப்பொழுதும் மௌனமான அவர்கள்
பல கதைகள் தோன்ற ஊக்குவிப்பவர்கள் !!
பார்வையாளர்கள் ஒருபோதும் பேசுவதில்லை
பேச அனுமதிக்கப்படுவதில்லை .....
எந்த புத்தகத்திலும் சுவர்மொழி கதைகள்
பிரசுரிகப்படுவதில்லை....
வரி வரியாய்...
பக்கம் பக்கமாய் ....
கதைகள் படித்து படித்து
கல்லாகி போன சுவர்கள்
கண்ணீர் சிந்த மறந்துவிட்டது .....
என்ன கதை சொன்னாலும் சுவர்கள்
சிரிப்பதும் அழுவதும் இல்லை !!!!
கதைகள் பிடித்தாலும் கை தட்டுவதில்லை !!!
கதைக்காக யாரும்
மாற்றலாகி செல்வதில்லை
சுவர் சுவராய் !!!
சொன்னவர் தவிர யாராலும்
சொல்லமுடிவதில்லை சுவர் மொழி கதைகளை !!
தொலைந்து போன கதையாளர்கள் !!!
மறந்து போன கதைகள் !!!
இறந்து போன சுவர்கள் !!!
அதனால் ............
சுவர் மொழி கதைகள் ஒருபோதும் பிரசுரிக்கபடுவதில்லை !!!!

Wednesday, 26 September 2012

கனவின் பயணம் !!என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

கனவின் பயணம் !!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


நீண்டு கொண்டே உள்ளது
விடியலின் வாசல் வரை ...
எங்கும் நிற்காமல் !!
அந்த உலகம் போல இந்த உலகம் இல்லை
பயணசீட்டும் இல்லை !!
பரிசோதகரும் இல்லை !!
நிற்பதே இல்லை நிறுத்தம் நிறுத்தமாய்....
கனவின் பயணசாலையில்
நெரிசல்களே இல்லை !!
காவல்துறையின் கண்காணிப்பும் இல்லை !!
பயணம் முழுவதும் யாரும் துணையாக
வருவதில்லை நிழலை தவிர ...
யாருமே தோற்பதில்லை
கனவின் பயணங்களில் !!!
யாருமே நிற்பதில்லை யாருக்காகவும்
கனவில் !!!
பயணம் மிக அழகானது
விடியும் வரை !!!!

Monday, 24 September 2012

நான் எப்போது நீயாவேன் !!!!என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

நான் எப்போது நீயாவேன்  !!!!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


நான் நானாகவே இருக்கிறேன் !!
உன்னை கண்ட பின்பும் !!
ஆதவன் சாயும் அந்தி வேளையில் !!!
ஆள் ஆரவாரமற்ற சாலையில்
ரசித்து நடந்து கொண்டிருக்கிறேன் என்னை .....
மழை பெய்து ஓய்ந்த மாலையில்
தேநீரிடம் தொலைத்து விட்டேன் என்னை .....
கால்களும் பூத்து கொள்ளும்
கானல் நீரும் கதை பேசும்
அனல் காற்று ஆளைகொல்லும்
ஓர் உச்சி வேளையில் !!!!
நின்னை தேடி அலையவில்லை
நீரை தேடியே அலைகிறேன் ...
தாகம் தணிக்க ....
தனிமையில் கரைகிறேன்
பாடல்களோடு ...
ஏங்கி தவிக்கவில்லை உன் பேச்சுக்காக !!!
என் எழுத்துகளில்
மை உள்ளது !!
உயிர் உள்ளது !!
நீ இல்லை .....
என் எழுத்துக்கள் உன் உயிராகும் போது
நான் நீயாவேன்  !!!

Tuesday, 18 September 2012

நீ இல்லாத ஊரில் ........என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி


நீ இல்லாத ஊரில் ........என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


வான வில்லும் வெறும் வில்லாகிறது ......
மழை பெய்த சாலை குழிகளில்
மழை நீர் மட்டுமே உள்ளது !!!
உன் முகம் எங்கே ???
நீ சென்ற ரயில் தினமும் வருகிறது
நேரத்திற்கு ....
நீ எங்கே வரவில்லை ??
பேருந்தின் ஜன்னல் ஓரம் இடம் கிடைத்தும் ....
கண்கள் முடியே இருக்கிறேன் ..
நீ இல்லாத ஊரில் யாரை பார்ப்பது ??
இங்கு பூக்களே கிடைப்பதில்லை
உன்னை பார்க்காமல்
பூக்கள் பூக்கவே மறந்துவிட்டது போல !!
மரங்கள் எல்லாம் இலையை கண்ணீராக
நினைத்து  உதிர்த்துகொண்டே இருக்கிறது !!!
நீ இல்லாத ஊரில்
யாருமே யாராகவும் இல்லை !!!
நீ இல்லையெனில் !!!

Thursday, 13 September 2012

நாங்கள் யார்…………………? என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி


நாங்கள் யார்…………………? என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி


வானவில்லை போன்று வர்ணம் கொண்டு வரவில்லை
புது வர்ணங்களையே   உருவாக்க வந்துள்ளோம் 
கல்லூரி வரியாக பிரிந்திருந்தாலும் என்றும் 
அச்சுத் தொழில்நுட்பத்தின் ஒரு கூட்டு பறவைகள்
இறைவன் படைத்தான் பூமியை
தற்போது இறைவனையே படைக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி!!!!!!      
மரநிழலில் காற்று வாங்க மட்டும் கற்றுகொண்டான்  மனிதன்
அதில் காகிதம் கண்டோம் நாம்
பறவையை கண்ட மனிதன் விமானம் படைத்தான்
மனிதர்களை கண்ட நாம்
அவனது முயற்சிக்காக!!!!!!         
அவனது வளர்ச்சிக்காக!!!!!!        
அவனது எழுச்சிக்காக!!!!!!            
புத்தகம் என்றொரு அறிவுப்பெட்டகம் படைத்தோம்
உலகம் அறியாத மனிதனுக்கு
நாளிதழ்கள் வழியாக உலகம் கொடுத்தோம் கையில் 
மரமாய்  நின்ற காகிதங்கள்
வெறும் காகிதமாகி  நின்றது
காகிதங்களுக்கு மதிப்பு கொடுத்தோம்
ரூபாய் நோடுக்களாகி நிற்கின்றது . . . .  . . . .  . . . . 
அக்காகிதம் இல்லை எனில் மானிட உலகத்தில் மனிதர்களுக்கு மதிப்பில்லை
இந்நாளில்  சாதனை கண்ட நாங்கள்
பின்னாளில் விண்ணிலும்  பொறிப்போம்
"அச்சுத்  தொழில்நுட்பம்  வாழ்க" என்று