Saturday, 1 September 2012

மழலைகளும் நாமும் ......என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

மழலைகளும் நாமும் ......என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி

எப்பொழுதும் நமக்கு பின்பே
பிறக்கிறார்கள்
ஆனால் நமக்கு முன்பே வளர்ந்து
விடுகிறார்கள் .......
ஒரு முறை தான் கைபிடித்து
 நடத்தி செல்கிறோம் !!!
பின் பலமுறை அவர்கள் கைபிடித்து
 நடந்துசெல்கிறோம் .......
நம் தவறுகளை யாருமே சரியாக சுட்டி காட்டுவதில்லை
தைரியமாக
குழந்தைகளை தவிர !!!!
சோதனைகளை கண்டு துவண்டு துவண்டு விழுகிறோம்.......
நம்மையும் மீட்டுவிடுகிறார்கள்
பிஞ்சுப்பூக்கள்
தங்கள் கொஞ்சும் சிரிப்புகளில் !!!!!
யாராக இருந்தாலும் அடிமைகளாகின்றோம்
மழலைகளின் கொஞ்சல்களுக்கு !!!!
மற்றவர்கள் பேச்சை எப்போது நிறுத்துவார்கள்
என  காத்திருக்கிறோம் ......
மழலைகளின் பேச்சை நிறுத்தாமல் இருக்க
வேண்டுகிறோம் !!!!
மழலைகள் கையால் உண்ட சோறு
தேவாமிர்தம் உண்ட உணர்வு !!!!!
யாரையும் ஜெயித்துவிடுகிறோம் .....
மழலைகளிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறோம்
சலிக்காமல் ......
வீடு கட்டுவதற்குள் வீழ்ந்து விடுகிறோம் .....
வீடுகள் கட்டிகொண்டே இருகிறார்கள்
மழலைகள் மணல்களில் !!!!!
ஒரே வரியில்.....
குழந்தைகள்  என்றால்
பூமியின் கடவுள்கள்
வரம்பெற்று கிடைத்தவர்கள்....
வரம்கொடுபவர்கள் !!!!!!
 

No comments:

Post a Comment