Thursday, 27 June 2013

யார் அவர்கள் !!!!! என் கவிதை சு.மா. காயத்ரி



யார் அவர்கள் !!!!!
என் கவிதை சு.மா. காயத்ரி

உணர்வுகள்

 
கை ஏந்தி நிற்கும் அவர்கள்
காலத்தின் கடைசி வாரிசுகள் .....
கண்டு கொள்ளாமலே
கடந்துவிடுகிறோம் !!!!!
அவர்கள் வீசி செல்லும் பார்வை....
என்னெனவோ செய்து விடுகிறது
நம்மை !!!!
அந்த பார்வையில்.......
இறந்த உயிரின் சாயல் ...
பிரிந்த உறவின் தோற்றம் ....
இவைகளை ஒருபோதும் சகிக்கமுடியவில்லை !!!!
பின்னர் புலம்பும் மனது
ஒரு ரூபாய் போட்டுருக்கலாம் என்று !!!!


https://www.facebook.com/pages/என்-கவிதை-கவித்திரி-சு-மாகாயத்ரி/479521935406031

கண்ணாடி சிதறல்கள்..... என் கவிதை சு.மா. காயத்ரி



கண்ணாடி  சிதறல்கள்.....
என் கவிதை சு.மா. காயத்ரி

 

மனம் ஓர் கண்ணாடி
தன் நிலையை பிரதிபலிக்கும்
- மனக்கண்ணாடி
இல்லாத வார்த்தையை கூட
சிதறச்செய்யும் பிம்பப்பூக்கள்......
மௌனமாய் பேசாத மொழிகள்
தேங்கி நிற்கும் வார்த்தைகள்.....
நதி மீது விழுந்தாலும்
உடையாத பிம்பப்பூக்கள்.......
நில்லாது ஓடினாலும்
நிற்காது துரத்தும்
நினைவு ரேகைகள் ......
சில் சில்லாய் உடைந்தாலும்
சிதறல்களாய் சிதறினாலும்.......
உதிராத  பிம்பங்கள்
இவை
# கண்ணாடி சிதறல்கள் ........

https://www.facebook.com/pages/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/479521935406031?ref=tn_tnmn

Wednesday, 26 June 2013

என் தேசம் என் மக்களின் பயணம் என் கவிதை சு.மா.காயத்ரி



என் தேசம் என் மக்களின்  பயணம்
என் கவிதை சு.மா.காயத்ரி

"""""இனி ஒரு விதி செய்வோம் """""

 
 சாலை  விதிகள் பல  இருந்தும்
அதை பொருட்படுத்தாது
தன் தலை விதியை
நம்பி இருக்கும் நன்மக்கள்....
படிக்கட்டில் பயணம்
செய்யாதே என்றாலும்
படியில் சாகசம் செய்யும்
இள ரத்தங்கள் ......
பாதசாரிகளை பொருட்படுத்தாது
வெற்றிலை எச்சில்
சாரல் மழை
பொழியும் வருண கடவுள்கள் ........
சாகச கூடங்கள் பல இருந்தும்
நடு சாலையில்
இரு சக்கர வித்தைகாரர்கள் .......
பெண்கள் என்று பெயர் பலகை
இருந்தாலும்
பெண்கள் பல நின்றிருந்தாலும்
அவ்விருக்கையில் வீற்றிருக்கும்
கனவான்கள் .......
முந்தி செல்லாதே என்றாலும்
முந்தி செல்லும் மூடர்கள் .....
பயணம் செய்யும் பல
வேளைகளில் அலைபேசியில்
கதைகள் அளந்து
நடு சாலையில் உயிர் விடும்
உயர் மக்கள் .....
தலை கவசத்தை விட
தன் தலையையே  கவசமாய்
எண்ணி தலை நசுங்கி
உயிர் விடும் என் மக்கள் .....

Friday, 21 June 2013

அய்யனார் குதிரை .... என் கவிதை சு.மா.காயத்ரி


அய்யனார் குதிரை ....
என் கவிதை சு.மா.காயத்ரி



 

யாருக்காகவும் பயப்படாமல்
தன்னந்தனியாக நிற்கும்
உன்னை பார்த்து
பயந்தவரே அதிகம் .......
காற்றுக்கும் மழைக்கும்
வெயிலுக்கும் குளிருக்கும்
ஓங்கிய காலுடன்
உயர்ந்து நிற்கிறாய் .......
ஊர் காத்து நிற்கும்
அரிவாளுடன் நிற்கும்
அய்யனாருக்கு வாகனமாய் நீ......
எங்கோ பார்த்த ஞாபகமாய்
தொலைந்து போன
எந்தன் கலசராம் .......
எப்போதோ நிழலுக்காக
நினைவுகூறப்படும்
அய்யனார் குதிரைகள் .......


# வீரம்

Thursday, 20 June 2013

கதை அல்ல நிஜம்........ என் கவிதை கவித்திரி சு.மா.காயத்ரி



கதை அல்ல நிஜம்
என் கவிதை கவித்திரி சு.மா.காயத்ரி

I am in love  

இரு விழியில்
சிறு தூசி விழுகையில்
உன் சுவாசகாற்று பட்டே
உயிர்தெழுகிறது என் இரு கண்கள்......
நிதம் நிதம் சுகம் சுகம்
உன்னோடு கனவோடு பயணிப்பதில் ......
உன் நினைவு
பிறப்பதிலிருந்து
என் சுய நினைவு உயிர்கிறது .....
உன் நினைவலைகளை
என் ரத்த நாளங்கள்
என்னுள் சுமந்து சுமந்து
என்னை நீயாக்குகிறது .......
சிறு பட்டுபூச்சியாய்
சிறகடித்து பறக்கிறது
என் மனது ........
இது
# கதை அல்ல நிஜம்