Tuesday, 11 June 2013

கிறுக்கல்கள்........ என் கவிதை சு.மா .காயத்திரி

கிறுக்கல்கள்
என் கவிதை சு.மா .காயத்திரி

 
மனம் போன போக்கில்
என் நினைவும்
நிற்காது போகிறது .....
கிறுக்கல்கள்
யாருக்குமே புரிவதில்லை
விட்டு சென்றவற்றில்
தொடங்குவதில்லை
கிறுக்கல்கள்......
பெயரும் வளைவும்
சுளிவும் நெளிவும்
கிறுக்கல்களின் தனித்தன்மை !!!!
கிறுக்கல்கள் பாதுகாக்கபடுவதில்லை
கிறுக்கல்கள் மனக்கண்ணாடி
கிறுக்கல்களின் ஆழம்
வலியின் நீளம் ......
கிறுக்கல்கள் இவ்வுலகம்
சார்ந்ததில்லை ......
கிறுக்கல்கள் ஓய்வதில்லை


# என் வாழ்வே கிறுக்கல்கள் 


No comments:

Post a Comment