Wednesday, 12 June 2013

நீயும் நானும் = நாமும் என் கவிதை சு.மா.காயத்திரி



நீயும் நானும் = நாமும்
என் கவிதை சு.மா.காயத்திரி

 

இடைவெளி இல்லாமல் தூறிய
தூவானம்
இடைப்பட்ட இடைவெளியில்
என் இடை சுற்றி கைகோர்த்தாய்......
கை கோர்த்து மழை ரசித்தோம் !!!!
துளி துளியாய் .....
என் இமை மூடி உன் தோள்
சாய்கையில்
என் உலகம் மறந்தேன் .....
கை கோர்த்து
உடல் சோர்ந்து
பயணித்தோம் நம்மிருவர் உலகில் ......
யாருமில்லா அடர்வனம்
யாருக்கோ விழித்திருக்கும் பால் நிலா
தூரப்பாயும் சிற்றோடை
பறவைகளின் பரவசம்
மலர் வாசனையில் மயங்கி
கிடக்கும் வண்டு.....
இங்கு நானும் நீயும் !!!!
இது நம்மிருவர் உலகம் .....

# மழை ஓய்ந்தது 

No comments:

Post a Comment