என் தேசம் என் மக்களின் பயணம்
என் கவிதை சு.மா.காயத்ரி
"""""இனி ஒரு விதி செய்வோம் """""
சாலை விதிகள் பல இருந்தும்
அதை பொருட்படுத்தாது
தன் தலை விதியை
நம்பி இருக்கும் நன்மக்கள்....
படிக்கட்டில் பயணம்
செய்யாதே என்றாலும்
படியில் சாகசம் செய்யும்
இள ரத்தங்கள் ......
பாதசாரிகளை பொருட்படுத்தாது
வெற்றிலை எச்சில்
சாரல் மழை
பொழியும் வருண கடவுள்கள் ........
சாகச கூடங்கள் பல இருந்தும்
நடு சாலையில்
இரு சக்கர வித்தைகாரர்கள் .......
பெண்கள் என்று பெயர் பலகை
இருந்தாலும்
பெண்கள் பல நின்றிருந்தாலும்
அவ்விருக்கையில் வீற்றிருக்கும்
கனவான்கள் .......
முந்தி செல்லாதே என்றாலும்
முந்தி செல்லும் மூடர்கள் .....
பயணம் செய்யும் பல
வேளைகளில் அலைபேசியில்
கதைகள் அளந்து
நடு சாலையில் உயிர் விடும்
உயர் மக்கள் .....
தலை கவசத்தை விட
தன் தலையையே கவசமாய்
எண்ணி தலை நசுங்கி
உயிர் விடும் என் மக்கள் .....
No comments:
Post a Comment