Thursday, 13 June 2013

கனவு தேசத்து பயணம் ... என் கவிதை சு.மா காயத்திரி



கனவு தேசத்து பயணம் ...
என் கவிதை சு.மா காயத்திரி

     

விழி மூடி
உடல் சாய்கையில்
தொடங்குகிறது
கனவு தேசத்து பயணம் ......
நிற்காது செல்லும்
உறக்க  தேசத்து பயணம்
கனவுக்குதிரையில்
யாருடனோ......
வழி எங்கும் யார் யாரோ
அவரவர் குதிரையில்
ஆள் ஆரவரமற்ற பாதையில்
மௌனமாய் விழி மூடியே
செல்கிறது
யாருமில்லா பாதையில் ......
நிதம் நிதம் இன்பம்
கணம் விழித்தாலும்
தொலைந்து போகும்
கனவுப்பயணம் ......



No comments:

Post a Comment