நாங்கள் யார்…………………? என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி
கவித்திரி சு .மா.காயத்ரி
வானவில்லை போன்று வர்ணம் கொண்டு வரவில்லை
புது வர்ணங்களையே உருவாக்க வந்துள்ளோம்
கல்லூரி வரியாக பிரிந்திருந்தாலும் என்றும்
அச்சுத் தொழில்நுட்பத்தின் ஒரு கூட்டு பறவைகள்
இறைவன் படைத்தான் பூமியை
தற்போது இறைவனையே படைக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி!!!!!!
மரநிழலில் காற்று வாங்க மட்டும் கற்றுகொண்டான் மனிதன்
அதில் காகிதம் கண்டோம் நாம்
பறவையை கண்ட மனிதன் விமானம் படைத்தான்
மனிதர்களை கண்ட நாம்
அவனது முயற்சிக்காக!!!!!!
அவனது வளர்ச்சிக்காக!!!!!!
அவனது எழுச்சிக்காக!!!!!!
புத்தகம் என்றொரு அறிவுப்பெட்டகம் படைத்தோம்
உலகம் அறியாத மனிதனுக்கு
நாளிதழ்கள் வழியாக உலகம் கொடுத்தோம் கையில்
மரமாய் நின்ற காகிதங்கள்
வெறும் காகிதமாகி நின்றது
காகிதங்களுக்கு மதிப்பு கொடுத்தோம்
ரூபாய் நோடுக்களாகி நிற்கின்றது . . . . . . . . . . . .
அக்காகிதம் இல்லை எனில் மானிட உலகத்தில் மனிதர்களுக்கு மதிப்பில்லை
இந்நாளில் சாதனை கண்ட நாங்கள்
பின்னாளில் விண்ணிலும் பொறிப்போம்
"அச்சுத் தொழில்நுட்பம் வாழ்க" என்று

Super vazhthukkal thozhi....
ReplyDelete